ஓலாக்கு விழுந்த மரண அடி! நம்பர் 1 இடத்தில் பிரபல தமிழ்நாட்டு கம்பெனி!
எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் விற்பவனையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதன் முறையாக ஓலாவை பின்னுக்கு தள்ளி ஏத்தர் நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு காலத்தில் எலெக்ட்ரிக் 2 வீலர் விற்பனையில் ஓலா நிறுவனம் அசைக்க முடியாத ராஜாவாக முதலிடத்தில் இருந்தது. அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வந்தது. மார்கெட்டில் இந்நிறுவனம் மிகப்பெரிய புரட்சியே செய்தது என்று சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.

கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 20,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பாஜாஜ் நிறுவனம் தான் இருக்கிறது இந்நிறுவனம் 16,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து 2வது இடத்தில் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்களை தொடர்ந்து ஓலா நிறுவனம் தான் இருந்தது. தற்போது ஓலாவை பின்னுக்கு தள்ளி ஏத்தர் நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஏத்தர் நிறுவனம் 15,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 12,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஓலா நிறுவனம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 5வது இடத்தில் ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனத்தின் விடா பிராண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமார் 11,000 விற்பனையாகி கிட்டத்தட்ட ஓலாவிற்கு டஃப் கொடுத்து வருகிறது.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி குறைப்பைால் பெட்ரோல் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தாலும், நவராத்திரி பண்டிகை காரணமாக விற்பனை ஒரளவிற்கு அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள் என்பதால் இந்த வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி பட்டியலில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.,

பஜாஜ் நிறுவனம் கடந்த மாதம் ரேர் எர்த் மேக்னட் பிரச்சனையால் தயாரிப்பு குறைவை சந்தித்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளது விற்பவனை எண்ணிக்கையில் தெரியவந்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப்பின் விடா பிராண்ட் ஸ்கூட்டர் முதன் முறையாக 10,000 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. பேட்டரிய அஸ் சர்வீஸ் மற்றும் அதிக மார்கெட்டில் காரணமாக இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மாதாந்திர விற்பனையில் வீழ்ச்சியை பெறஅறள்ளது. இந்தாண்டு பெரும்பாலான மாதங்களில் முந்தைய மாதத்தை விட விற்பனை குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான விற்பனையில் நம்பர் 3 இடத்தில் ஓலா இருக்கிறது. 1.6 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நம்பர் 4 இடத்தில ஏத்தர் 1.3 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.,
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் ரசிக்க துவங்கிவிட்டனர். இதனால் விற்பனையில் புரட்சியே நடந்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









