நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாதனையா? 2 லட்சம் வண்டிய தயாரிச்சிட்டாங்களே!

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இணைந்து 2 லட்சம் வாகனங்களை தயாரித்து நுதி சாதனை மைல் கல்லை எப்படி டித்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதன் பிராண்டுகளில் வாகனங்களை தயாரிக்க டிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி கடந்த 2013ம் ஆண்டு முதல் டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ பிராண்டிற்காக டூவீலர்களை தயாரித்து வருகிறது. முக்கியமாக பிஎம்டபிள்யூ பிராண்டில் வரும் 500 சிசிக்கு குறைவான பைக்குகளை தயாரிக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளபபட்டது.

TVS BMW Hits 2 Lakh Milestone

இந்த ஒப்பந்த்தின் கீழ் கடந்த 12 ஆண்டுகளாக பிரிமியம் ரக சிறிய பைக்குகள் தயாரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகிறது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கூட டிவிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பைக்குகள் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது போக இந்தியாவிலும் இந்த பைக்குகள் விற்பனையாகி வருகின்றனர்.

தற்போது டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ பிராண்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ், ஜி 310 ஆர்ஆர் ஆகிய பைக்ககளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டுத்த பைக்காக பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் என்ற புதிய மிடில் வெயிட் அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்கவுள்ளது. இந்த பைக் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட EICMA 2025ல் காட்சிப்படுத்தப்பட்டது.

TVS BMW Hits 2 Lakh Milestone

இது குறைந்த விலையில் ஜிஎஸ் அட்வெஞ்சர் ரக பைக்களுக்கு ஒரு எண்ட்ரி லெவல் பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் அடுத்த மாதம் கோவாவில் நடக்கவுள்ள இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் தயாரிப்புகள் ஓசூரில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் வைத்து தான் நடக்கவுள்ளது.

இந்த எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் ஜிஎஸ் பைக்குகளுக்காகவே உள்ள உயரம், முன்பக்கம் எக்ஸ் வடிவ எல்இடி ஹெட்லைட், காம்பேக்ட் ஃபார்மெட், டியூப்லர் ஸ்டீல் பிரேம், 178 கிலோ எடை, 420 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் உடன் 135 டிகிகரி கிராக் பின் ஆப்செட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TVS BMW Hits 2 Lakh Milestone

இந்த பைக் 48 எச்பி பவரையும் 43 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இநத பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ணஸ்,ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த பைக்கில் உள்ள சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் கேஒய்பி 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளுது. பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்ட்களில் அடட்ஜெஸ்டபிள் சஸ்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை பிரம்போ டிஸ்க் பிரேக் முன்பக்கமும், பைபிரே பிரேக் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கில் கார்னரிங் ஏபிஎம், டிராக்ஷன் கண்ட்ரோல், டைமனிக் பிரேக் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் 4 விதமான வேரயின்ட்கள் உள்ளது. பேசிக், எக்ஸ்க்ளூஸிவ், ஸ்போர்ட், ஜிஎஸ் ஆகிய வேரியன்ட்கள் உள்ளது. ரைடு மோடுகளை பொருத்தவரை ரெயின், ரோடு, எண்டிரோ, எண்டிரோ ப்ரோ ஆகிய வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் 6.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், யூஎஸ்பி டைப் சி சார்ஜிங், ஹீட்டட் கிரிப்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம்இந்தியாவில் அதிக அளவில் வாகனங்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் உலகளவில் ஏற்றுமதி செய்கிறது. இது நிச்சயம் இந்தியாவிற்கு ஒரு பொருளாதார வளர்ச்சியை தரும். குறிப்பாக தமிழக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 28, 2025, 18:15 [IST]
English summary
Tvs bmw hits 2 lakh milestone f450gs production starts
மேலும்... #bmw motorrad #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X