வெளிநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு கம்பெனி! இவ்வளவு வண்டியை கொண்டு வந்துட்டாங்களா?
டிவிஎஸ் நிறுவனம் இத்தாலியின் நடந்து வரும் EICMA கண்காட்சியில் தனது 6 தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் நவீன தொழிற்நுபங்கள் மற்றும் சர்வதேச முதலீடு குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் நார்டன் பிராண்டின் மீது செய்துள்ள முதலீடு மற்றும் தயாரிப்புகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் EICMA2025ல் தனது தயாரிப்புகளை காட்சியப்படுத்தியுள்ளது. EICMA என்பது உலகின் மிகப்பெரிய டூவீலர் கண்காட்சியாகும். இங்கு தனது 6 தயாரிப்புகளை காட்சிப்படுத்த முடியும். இந்நிறுவனம் தற்போது ஐரோப்பிய மார்கெட்டிலும் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் 6 தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் டேங்கேன்ட் ஆர்ஆர் கான்செப்ட் வாகனத்தை காட்சிப்படுத்தியளு்ளது. இது ஒரு சூப்பர் ஸ்போர்ட் பைக் ஆகும். இந்த பைக்கின் அம்சம் என்றால் ரெவல்யூஷனரி மோனோக்யூ சப் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் இஎஃப்எக்ஸ் த்ரீ ஓ எனற எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியளு்ளது. இது அந்நிறுவனத்தின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக் கான்செப்டாக இருக்கிறது.
டிவிஎஸ் எம்1எஸ் டூவீலர் வாகனத்தை பொருத்தவரை எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரை பொருத்தவரை டிவிஎஸ் நிறுவனம் இதுவரை ஒரு வாகனத்தை கூட விற்பனை செய்யவில்லை. இந்நிலையில்இந்த செகமெண்டில் இந்நிறுவனம் வெளியிடும் முதல் வாகனம் இது தான்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 என்ற அட்வெஞ்சர் டூரர் பைக்கை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த செகமெண்டில் புதிய பெஞ்ச் மார்க்கை ஏற்படுத்தும் வகையில் இந்த பைக்கை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பைக் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
டிவிஎஸ் நிறுவனம் டிவிஎஸ் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் வாகனத்தைகாட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் தனித்துவமான விஷயம் செக்மெண்டில் புதிய தொழிற்நுட்பம் கொண்ட வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக டிவிஎஸ் ஆர்டிஆர் ஹைப்பர் ஸ்டிண்ட் கன்செப்ட் பைக்கை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது சிட்டி பகுதிக்குள் ஓட்ட ஏற்ற பைக்காகவும், தினசரி பைக் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றவாகனமாகவும் உருவாக்க அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வது போல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியை செய்து வருகிறது.இந்நிறுவனம் 100 ரூபாய் சம்பாதிக்கிறது என்றால் அதில் 35 ரூபாய் வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் இருந்து பெறுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் தனது ஏற்றுமதி வர்த்தகத்தை வரிவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும் புதிய நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவமன் நார்டன் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளுடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து தற்போது 200 மில்லிய யூரோ மதிப்பிலான தொகையை முதலீடு செய்துள்ளது. இந்த பிராண்டில் பிரிமியம் பைக்குகளைதயாரிக்கிறது. இந்நிறுவனம் 4 புதிய பைக்குகளை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது.இந்நிறுவனம் வரும் ஆண்டுகளில் தனது பணியாளர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் அதிகரிக்கவும் உலகம் முழுவதும் 200 ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் நல்ல பெயரை சம்பாதித்து வருகிறது. இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









