ஒட்டுமொத்த உலகையும் மிரள விட போகும் மைலேஜ்! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட வரும் டிவிஎஸ் ஸ்கூட்டர்!
இந்திய வாடிக்கையாளர்கள் புதிய கார் அல்லது டூவீலர் என எந்தவொரு வாகனத்தை வாங்கினாலும், மைலேஜிற்கு (Mileage) அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும், அதிக மைலேஜ் வழங்க கூடிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக டூவீலர் நிறுவனங்கள், அதிக மைலேஜ் வழங்கும் சிஎன்ஜி வாகனங்களை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமையுடன் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Bajaj Freedom 125 CNG) இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி (TVS Jupiter 125 CNG) வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில், இந்த ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இன்னும் ஒரு சில மாதங்களில், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை (Design) பொறுத்தவரையில், பெட்ரோல் மூலம் இயங்கும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் போலவேதான், சிஎன்ஜி வெர்ஷனும் இருக்கும்.

எனினும் ஒரு சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். வசதிகளை (Features) பொறுத்தவரையில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜர், மொபைல் போன் கனெக்டிவிட்டி, சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் முக்கியமான அம்சமே அதன் மைலேஜ்தான். டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரில், 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 7.2 ஹெச்பி மற்றும் 9.4 என்எம் டார்க் ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் பவர் அவுட்புட் 8.1 பிஹெச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் ஆக உள்ளது. அதாவது பெட்ரோல் மாடல் உடன் ஒப்பிடும்போது, டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் பவர் அவுட் சற்று குறைவாக இருக்கும்.
அதேபோல் இருக்கை அடியில் பொருட்களை வைத்து கொள்வதற்கான இடவசதியும் கிடைக்காது. அதாவது பெட்ரோல் மூலமாக இயங்கும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில், 33 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில், சிஎன்ஜி சிலிண்டர் இருக்கும்.
எனவே இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்க முடியாது. பவர் அவுட்புட் மற்றும் பூட் ஸ்பேஸில் சமரசம் என்றாலும், சிறப்பான மைலேஜ் அந்த குறைகளை நிவர்த்தி செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் என்பதால், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் டிவிஎஸ் நிறுவனம் விலையை (Price) சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். விலை நிர்ணயம் சரியாக இருந்தால், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








