உலகையே மிரள விட போகும் தமிழ்நாட்டு ஸ்கூட்டர்! மைலேஜை கேட்டதும் போட்டி நிறுவனங்கள் வெடவெடத்து போயிருக்கும்
இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்கள் (CNG Cars), மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2024-25ம் நிதியாண்டில், டீசல் கார்களை (Diesel Cars) விட, சிஎன்ஜி கார்கள்தான் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் ஒரு நிதியாண்டில், டீசல் கார்களை விட, சிஎன்ஜி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு ஏராளமான காரணங்களை கூற முடியும். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை விட, சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையுடன் (Petrol, Diesel Price) ஒப்பிடும்போது, சிஎன்ஜி விலையும் (CNG Price) மிகவும் குறைவு.

இதன் காரணமாகவே சிஎன்ஜி கார்களை, வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவில் தற்போது சிஎன்ஜி டூவீலர்களும் (CNG Two Wheelers) விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமையுடன், பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) பைக், கடந்த 2024ம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் 125 சிஎன்ஜி (TVS Jupiter 125 CNG), விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (2025 Bharat Mobility Global Expo), வாகன திருவிழாவில், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர், அடுத்த ஆண்டு (2026) மத்தியில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக காடிவாடி தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில், 7.1 பிஹெச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையிலான, 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும். இதன் டாப் ஸ்பீடு அனேகமாக மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.
டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரில், இருக்கைக்கு அடியில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டிருக்கும். எனவே மற்ற வழக்கான ஐசி இன்ஜின் ஸ்கூட்டர்களை போன்று, அங்கு பொருட்கள் எதையும் வைத்து கொள்ள முடியாது. இருப்பினும் இந்த ஸ்கூட்டர் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும்.
டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் அனேகமாக ஒரு கிலோவிற்கு 84 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். ஆனால் இந்த ஸ்கூட்டரின் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு 1.4 கிலோ என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி கார்களை போல், இந்த சிஎன்ஜி ஸ்கூட்டரையும், சிஎன்ஜி மூலமாக மட்டுமல்லாது, பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.
இதற்காக தனியாக பெட்ரோல் டேங்க்கையும் இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர் கொண்டிருக்கும். பெட்ரோல் டேங்க்கின் கொள்ளளவு அனேகமாக 2 லிட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதன் வருகை, ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) போன்ற ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர், 90 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விலையில் வந்தால், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர், விற்பனையில் சாதனைகளை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








