கம்மி விலையில இப்படி ஒரு ஸ்கூட்டரா? யாருமே எதிர்பார்க்காத நேரத்துல டிவிஎஸ் செய்த மேஜிக்!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூபிடர் 125 DT SXC ஸ்கூட்டரை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனம் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. அதுவும் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளதால் இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் தனது ஜூபிட்டர் ஸ்கூட்டரை நீண்ட ஆண்களாக சிறப்பாக விற்பனை செய்து வருகிறது.தற்போது அனைத்துவிதமான மக்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் புதிய வேரியன்டை அறிகும்ப்படுத்தியுள்ளது. இந்த DT SXC வேரியன்ட் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வாகனமாக இருந்தது.

இந்த வாகனத்தில் பல்வேறு அப்டேட்களும் நவீன அம்சங்களம் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமா டிவிஎஸ் நிறுவனம் இதில் தனது ஸ்மார்டர் எக்ஸ் கனெக்ட் எக்ஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த கார் ஐவரி பிரெளன் என்ற டூயல் டோன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த கலராக இருகு்கிறது. இந்த ஸ்கூட்டரின் இன்னர் பேனல்களும் டுயல் டோனில் வழங்கப்பட்டுள்ளது. சீட் கலரும் இதே போல டுயல் டோனில் வழங்கப்பட்டுள்ளது.
இது போக இந்த ஸ்கூட்டரின் கிராப் ரெயிலும் பாடி கலரிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இது இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்டிவிட்டி அம்சத்துடன் இருக்கறது. இது போக இதில் வெஹிகிள் டிராக்கிங், வாய்ஸ் கமெண்ட்ஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் , எஸ்எம்எஸ் அலர்ட்ஸ், டிசைன் மேம்படுத்தப்பட்ட கன்ஸ்யூமர் பேனல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
இதன் இன்ஜினை பொரத்தவரை அதே 124.8சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை 8 பிஎச்பி பவரில் அசிஸ்ட் இல்லாமலும் 8.4 பிஎச்பி பவரிலு அசிஸ்ட் உடனும் இயங்க அனுமதிக்கிறது. இது அசிஸ்ட் இல்லாமல் 10.5 என்எம் டார்க் திறனையும், அசிறா்ட் உடன் 11.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது நேரடியாக சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் ஜூபிட்டர் ஸ்கூட்டரில் உள்ள அதே டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் சஸ்பென்சன் மற்றும் பின்பக்கம் டுவின் டியூப் ஷாக் அப்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங்களை பொருத்தவரை முன்பக்கம் 220 மிமீ டிஸ்க், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. 12 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 163 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ88,942 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் பலர் இதை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது வாடிக்கையாளரை அதிகம் ஈர்க்கும் யுக்தியாக இருக்கிறது. அதுவும் குறைந்த விலையில் இந்த வாகனங்கள் வந்துள்ளது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான்.


Click it and Unblock the Notifications








