90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! ஹோண்டா ஆக்டிவா சோலி முடின்ச்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 77,086 ஜூபிடர் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,02,588 ஆக உயர்ந்துள்ளது. இது 33.08 சதவீத வளர்ச்சி ஆகும்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் முக்கியமான போட்டி மாடலான ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் 25.17 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் 33.08 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியிருக்கிறது.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில், டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 என மொத்தம் 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில், 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.9 kW பவரை உருவாக்க கூடியது.

இதன் எடை 106 கிலோ ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விலை 77,291 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில், 124.76 சிசி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜன் அதிகபட்சமாக 6 kW பவரை உருவாக்கும்.
இதன் எடை 108 கிலோ ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் விலை 80,740 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை தற்போதே சிறப்பாக உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதுதான் இதற்கு காரணம். இதன் மூலம் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடர் பெறவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சந்தையில், டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் நடப்பு 2025ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இதன் ஆரம்ப விலை 85-90 ஆயிரம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








