90 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை திரும்பி பாக்க போகுது!
இந்திய சந்தையில் ஸ்கூட்டர் என்றாலே, அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஹோண்டா ஆக்டிவாதான் (Honda Activa). அதற்கு நேரடி போட்டியாக இருந்து வரும் ஒரு ஸ்கூட்டர்தான் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). ஹோண்டா ஆக்டிவாவிற்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற வகையில், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை, மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒட்டுமொத்தமாக 1,42,411 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 89,327 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 53,084 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 59.43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers August 2025) டிவிஎஸ் ஜூபிடர் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹோண்டா ஷைன் ஆகிய டூவீலர்கள் உள்ளன.
இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், டிவிஎஸ் ஜூபிடர் ஒன்றாகும். தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை வெறும் 72,400 ரூபாயாக மட்டுமே உள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருப்பது, 113.3 சிசி இன்ஜின் ஆகும்.
இந்த ஸ்கூட்டரின் மற்றொரு வெர்ஷன் டிவிஎஸ் ஜூபிடர் 125 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெயருக்கு ஏற்ற வகையில், இந்த வெர்ஷனில், 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையும் கூட வெறும் 75,600 ரூபாயாக மட்டுமே உள்ளது.
இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை(Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
முன்னதாக ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு அமலுக்கு வருவதற்கு முன்னதாக, டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 78,631 ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 82,045 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், தற்போது டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விலையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில், ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்று வர்ணிக்கப்படும் இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். இந்த புதிய வெர்ஷனின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








