தமிழ்நாட்டு ஸ்கூட்டரை வாங்க உலக நாடுகள் வரிசையில் நிக்க போகுது! நம்பவே முடியாத மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!
இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்குவது என ஒருவர் முடிவு செய்து விட்டால், அவரது முதல் சாய்ஸ் நிச்சயம் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டராகதான் இருக்கும். தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான் தன்வசம் வைத்துள்ளது.
அப்படிப்பட்ட ஆக்டிவாவிற்கு டஃப் குடுக்கும் ஒரு ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் ஜூபிடர் திகழ்கிறது. இந்திய சந்தையில் கடந்த 2013ம் ஆண்டுதான் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 12 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களின் பட்டியலில், ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக, டிவிஎஸ் ஜூபிடர் தவறாமல் 2வது இடத்தை பிடித்து விடும். நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல் - அக்டோபர்) அதுதான் நடந்துள்ளது.
நடப்பு 2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் 1,02,588 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், மே மாதத்தில் 97,606 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், ஜூன் மாதத்தில் 1,07,980 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், ஜூலை மாதத்தில் 1,24,876 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 1,42,411 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், செப்டம்பர் மாதத்தில் 1,42,116 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும், அக்டோபர் மாதத்தில் 1,18,888 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தத்தில் நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 8,36,465 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களின் பட்டியலில், ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக, டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பிடித்துள்ளது.
வழக்கம் போல இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான் உள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 16,14,716 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தரவுகள் ரஸ்லேன் தளத்தில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.

இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவாவிற்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ஜூபிடரை இந்திய வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாக புரிகிறது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை 113.3 சிசி இன்ஜின் மற்றும் 124.76 சிசி இன்ஜின் வெர்ஷன்கள் ஆகும்.
இதில், 113.3 சிசி இன்ஜின் வெர்ஷனில், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப், எமர்ஜென்ஸி பிரேக் வார்னிங், டர்ன் சிக்னல் லேம்ப் ரீசெட் மற்றும் ஹசார்டு லேம்ப்கள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 113.3 சிசி வெர்ஷனில்தான் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் 124.76 சிசி இன்ஜின் வெர்ஷனில், வாய்ஸ் அஸிஸ்ட் உடன் நேவிகேஷன், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப், சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் டிஸ்க் பிரேக் மற்றும் முன் பகுதியில் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால்தான், டிவிஎஸ் ஜூபிடர் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 113.3 சிசி வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 74,850 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 87,650 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் இதன் 124.76 சிசி வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 75,950 ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 86,900 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக வாடிக்கையாளர்களால் கருதப்படுவதும், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன் இது விற்பனைக்கு வரவுள்ளது.
இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதன் ஆரம்ப விலையும் கூட வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனின் வருகை, இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









