ஹோண்டா ஆக்டிவா சோலி முடின்ச்! 90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை களத்தில் இறக்கும் தமிழ்நாட்டு நிறுவனம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்று 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். மற்றொரு வெர்ஷனில் 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், ஒட்டுமொத்தமாக 1,24,876 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

TVS Jupiter

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 74,663 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 50,213 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 67.25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers July 2025), டிவிஎஸ் ஜூபிடர் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

TVS Jupiter 125 CNG

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகிய டூவீலர்கள் உள்ளன. இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரானது, ஹோண்டா ஆக்டிவாவிற்கு நேரடி போட்டி மாடல் ஆகும்.

இதன் 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலின் ஆரம்ப விலை 78,631 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலின் ஆரம்ப விலை 82,045 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

வரும் காலங்களில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதுதான் இதற்கு காரணம். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 124.76 சிசி வெர்ஷனில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன் விற்பனைக்கு வரவுள்ள இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடப்பு 2025ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிஎன்ஜி மாடலின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் திகழ்கிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மாற்றாக ஒரு ஸ்கூட்டரை பரிசீலனை செய்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் ஜூபிடர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 13:45 [IST]
English summary
Tvs jupiter sales report july 2025 67 25 per cent growth
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+