உலகமே இந்தியாவை திரும்பி பாக்க போகுது! 90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை களத்தில் இறக்குகிறது டிவிஎஸ்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 1,07,980 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், இந்த எண்ணிக்கை வெறும் 72,100 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35,880 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 49.76 சதவீத வளர்ச்சி ஆகும்.

TVS Jupiter 125 CNG Side Design

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters June 2025), டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஆகும்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போது மொத்தம் 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ஒன்றாகும். இதன் பவர் அவுட்புட் 5.9 kW பவர் ஆகவும், 9.8 Nm டார்க் ஆகவும் உள்ளது. இதன் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

TVS Jupiter

இந்த மாடலின் விலை 78,631 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் மற்றொரு மாடலில் 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 6.0 KW பவர் ஆகவும், 10.5 Nm டார்க் திறன் ஆகவும் உள்ளது. இந்த இன்ஜின் உடனும், சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 81,090 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை தற்போதே மிகவும் சிறப்பாகதான் உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இதன் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. சிஎன்ஜி வெர்ஷனின் வருகைதான் இதற்கு காரணம்.

ஆம், டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன், டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் மீது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரில், 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 23:19 [IST]
English summary
Tvs jupiter sales report june 2025 49 76 per cent growth
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+