90 கிமீ மைலேஜ்! விலை இவ்ளோதானா! உலகமே தமிழ்நாட்டை திரும்பி பாக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 1,24,782 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 99,710 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 25,072 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

TVS Jupiter 125 CNG Side Design

இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 25.14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers November 2025), டிவிஎஸ் ஜூபிடர் 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகியவை இருக்கின்றன. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா ஷைன் ஆகியவை பைக்குகள் ஆகும். அப்படியானால் ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிடர் திகழ்கிறது.

TVS Jupiter

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு வெர்ஷனில், 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 72,650 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மற்றொரு வெர்ஷனில், 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 75,950 ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். டிவிஎஸ் நிறுவனம் கூடிய விரைவில், ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Sooter) என்ற பெருமையை இது பெறவுள்ளது.

இதன் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டின் மூலமாகவும் இயங்க கூடிய, 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் ஆரம்ப விலை வெறும் 90 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயம்தான். சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம். இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவாவிற்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 23:13 [IST]
English summary
Tvs jupiter sales report november 2025 25 14 per cent growth
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+