90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை அடிமாட்டு விலையில் களமிறக்கும் தமிழ்நாட்டு நிறுவனம்! ஹோண்டா ஆக்டிவா காலி!
இந்தியாவில் ஒரு சில ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதில், டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மிகவும் முக்கியமானது. இந்தியர்களின் விருப்பமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, டிவிஎஸ் ஜூபிடர் பதிவு செய்து வருகிறது.
இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,18,888 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,09,702 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 9,186 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 8.37 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers October 2025) 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), ஹோண்டா ஷைன் (Honda Shine) மற்றும் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் 5வது இடம் பிடித்துள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர், டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 என மொத்தம் 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
இதில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 72,400 ரூபாயாக உள்ளது. இது 113.3 சிசி இன்ஜினை கொண்ட ஸ்கூட்டர் ஆகும். மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 75,600 ரூபாயாக இருக்கிறது. இது 124.76 சிசி இன்ஜினை கொண்ட மாடல் ஆகும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்து விலைகளும், டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
கூடிய விரைவில், டிவிஎஸ் நிறுவனம், ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Sooter) ஆகும். இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்த ஸ்கூட்டரை 2026ம் ஆண்டின் மத்தியில் நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூபிடர், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் ஜூபிடர் பதிவு செய்து வருகிறது. இது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) போன்ற ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








