90 கிமீ மைலேஜ் ஸ்கூட்டரை அடிமட்ட விலையில் விற்க போகும் டிவிஎஸ்! ஹோண்டா ஆக்டிவா கதை முடிஞ்சுது!
இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டின் கிங் என்றால், அது சந்தேகமே இல்லாமல், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) என கூறி விடலாம். அப்படிப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நேர் எதிர் போட்டி மாடலாக, டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் இருந்து வருகிறது.
இந்த சூழலில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் செப்டம்பர் மாதம், 1,42,116 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வெறும் 1,02,934 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 39,182 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 38.07 சதவீத வளர்ச்சி ஆகும். வரும் நாட்களில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில், டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 125 சிசி வெர்ஷன் அடிப்படையில் இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர் உருவாக்கப்படவுள்ளது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை டிவிஎஸ் ஜூபிடர் 110 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆகியவை ஆகும். இந்த வரிசையில் மூன்றாவதாக, டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் என்பதால், டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே இதன் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு பிறகு, டிவிஎஸ் ஜூபிடர்தான் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில், டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தில் உள்ளது. ஹோண்டா ஆக்டிவா இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








