கருப்பு கலர் விரும்பிகளுக்கு வந்த ஸ்பெஷல் வண்டி! விலை இவ்வளவு தானா?
டிவிஎஸ் நிறுவனம் தனது ஜூபிட்டர் ஸ்கூட்டரின் ஸ்டார் டஸ்ட் எடிசனை அறிமுகப்படுத்தியள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ93,031 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூபிட்டர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் வெர்ஷனாக ஸ்டார் டஸ்ட் வெர்ஷனைஅ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ93,031 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதில் காஸ்மெட்டிக் மேம்பாடு செய்யப்பட்டு ரெகுலர் மாடலில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக லுக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிவிஎஸ் ஸ்டார்டஸ்ட் பிளாக் எடிசனை பொருத்தவரை எஸ்எக்ஸ்சி டிஸ்க் வேரியன்டை அப்டேட்டை செய்துள்ளது. இந்த டிவிஎஸ் தனது எக்ஸ்எக்ஸ்சி விலையை விட ரூ1,000 என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேஸ் வேரியன்ட் விலை ரூ78,881 ஆகும்.
இந்த ஸ்பெஷல் எடிசன் பிளாக் கலர் தீமில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிக விருது வாங்கிய ஸ்கூட்டராக இருக்கிறது. இதில் மெக்கானிக்கல் மாற்றம் எதுவும்இல்லை. இதில் முன்பக்கம் ஃப்யூயுல் ஃபில்ல் கேப் இருக்கிறது. இது பாதுகாப்பான விஷயமாக இருகு்கிறது. இதில் பெரிய சீட் மற்றும் அதிக ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இதில் இரண்டு ஹெல்மெட் இருக்கிறது.

இதில் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் கனெக்டிவிட்டி அம்சம் இருக்கிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டென்ட், இருக்கும் பெட்ரோலில் எவ்வளவு தூரம் வரை செல்லும் என்ற தகவல், ஃபைன்ட் மை வெஹிகிள், மைலேஜ், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நேவிகேஷன், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் அளவுகளை பொருத்தவரை 1848 மிமீ நீளமும், 665 மிமீ அகலமும், 1158 மிமீ உயரமும் வழங்கப்பட்டுள்ளது. 1275 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. 163 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 770 மிமீ உயரத்தில் சீட் உள்ளது. சீட் 756 மிமீ நீளத்தில் இருக்கிறது. முன்பக்கம் காலை வைக்க 360 மிமீ இட வசதி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 106 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 113.3 சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்டோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.9 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 9.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செட்டப் 2 வால்வு கொண்ட செட்டப்பில் உள்ளது.இந்த ஸ்கூட்டர் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்சன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ட்வின் ட்யூப் எடிசன் ஷாக் அப்சர்பர்களுடன் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க சஸ்பென்சஷனை வைத்து 3 ஸ்டெப் அட்ஜெஸ்மென்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரேக் அம்சங்களை பொருத்தவரை 220 மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்கமும், 130 மிமி டிரம் பிரேக் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 90/90-12 டியூப்லெஸ் டயர்கள் இரண்டு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஜூபிட்டர் ஸ்கூட்டரின் ஸ்டார் டஸ்ட் பிளாக் எடிசனை அறிமுகப்படுத்தியது மூலம் இதில் முக்கிய அப்டேட்டை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் கருப்பு நிற ஸ்பெஷல் எடிசனை எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார் போல இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள.்


Click it and Unblock the Notifications









