இப்படி ஒரு ஸ்கூட்டரை தான் நாடே எதிர்பார்க்குது! ஆனா இது வெளிநாட்டுல தான் வரப்போகுது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது அடுத்த வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடக்கவுள்ள EICMA 2025 நிகழ்ச்சியில் M1-S என்ற எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை காட்சிப்படுத்தவுள்ளது.இது குறித்த டீசரை இந்நிறுவனம் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த M1-S ஸ்கூட்டர் சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட ஐயான் என்ற குழுமத்துடன் சேர்ந்துதயாரித்துள்ளது. அந்நிறுவனத்திற்கு டிவிஎஸ் நிறுவனம் முக்கியமான முதலீட்டாளராக இருகு்கிறது. இந்நிலையில் இ்நத வானதம் முதலில் ஐயான் M1-S என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவிஎஸ் நிறுவனம் தொழிற்நுட்ப சப்போர்ட், தயாரிப்பு மேம்பாடு, ஆப்ரேஷசன்ஸ், காப்புரிமை எல்லாம் டிவிஎஸ் நிறுவனம் பார்த்துக்கொள்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 4.3kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 16.76 பிஎச்பி பவரையும் 45என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த வாகனம் 0-50 கிமீ வேகத்தை வெறும் 3.7 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த வாகனம் அதிகபட்சம் 105 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வாகனம் ஒரு முறை சார்ஜ் போட்டால் 150 கி.மீ பயணிக்கும் திறன்கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் வடிவமைப்பு அக்ரஸிவாகவும், ஏரோடைனமிக் வடிவமைப்பிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ட்வின் எல்இடி ஹெட்லைட்டுகள், மற்றும் டிஆர்எல் இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஃபிளாட் ஃப்ளோர் போர்டு, சிங்கிள் பீஸ் சீட், ஸ்லீக்கான் பின்பக்க கிராப் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த வாகனத்தில் 7 இன்ச் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளே, ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, மியூசிக் கண்ட்ரோல், நேவிகேஷனவ், கால்/எஸ்எம்எஸ் அலர்ட், ஸ்மார்ட் கீ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்துடிவிஎஸ் நிறுவனம் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
மாறாக இந்த வாகனம் இந்தோனேஷியாவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதன் பின்னர் இந்த வாகனம் இந்தியாவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இந்தவாகனம் இந்தியாவிற்கு வந்தால் மேக்ஸி ஸ்கூட்டரில் ஒரு புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. நவீன ஸ்கூட்டர் விரும்பிகளுக்கு இது ஒரு வரபிரசாதம் தான்.
இந்தியாவில் தற்போது மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு பெரிய அளவில் மார்கெட் இல்லை. இதனால் பலர் இந்த வாகனங்களை வாங்க தயங்கிவருகிறார்கள். ஆனால் இந்தேனேஷியாவில் இந்த ரக வாகனங்களுக்கு வரவேற்பு இருப்பதால் பலர் இதை வாங்கி வருகின்றனர். இதனால் இந்தோனேஷியா மார்கெட்டை முதலில் டார்கெட் செய்கிறார்கள். அங்கு வெற்றி பெற்றால் அதை வைத்து இந்தியாவிலும் இதை வெற்றி பெற வைக்க வாய்ப்புள்ளதால் டிவிஎஸ் நிறுவனம் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது.இந்த ஸ்கூட்டர் வரும் 2026ம் ஆண்டிற்க பிறகு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் தனக்கென ஒர பெயரை வைத்துள்ளது. தற்போது டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த ஸ்கூட்டர் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









