தமிழ்நாட்டு கம்பெனியாய் ஒவ்வொருத்தரும் பெருமை படனும்! உலகளவில் டிவிஎஸ் முதல்முறையா செய்த சாதனை!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனம். 2-வீலர்கள் (2-Wheelers) மட்டுமின்றி, 3-வீலர்களையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இப்படிப்பட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடந்து முடிந்த 2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் இதுவரையில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து, இந்தியாவை தாண்டி பல உலக நாடுகளிலும் டிவிஎஸ் செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் டிவிஎஸ் மோட்டார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 536 ஆகும். டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை ஒரு மாதத்தில் 5 லட்சத்தை கடப்பது இதுவே முதல்முறை ஆகும்.

tvs motor 2-wheeler sales

இதனை டிவிஎஸ் நிறுவனமே தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5 லட்சத்து 536 வாகனங்கள் ஆனது கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் விறபனை செய்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 588 என்கிற விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 30% அதிகமாகும்.

இந்த ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கைகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் 2-வீலர்கள் விற்பனை எண்ணிக்கை மட்டுமில்லாமல், 3-வீலர்கள் (3-Wheelers) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனையை மட்டும் பார்த்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 788 டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

tvs motor 2-wheeler sales

இது இந்தியா உள்பட உலகம் முழுக்க கடந்த ஆகஸ்ட்டில் டிவிஎஸ் விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கை ஆகும். கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 841 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் உலகம் மொத்தமாகவே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை 30% அதிகரித்துள்ளது.

2-வீலர் விற்பனை அதிகரிப்பு தான் டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களை மட்டும் தனியாக எடுத்து பார்த்தோமேயானால், கடந்த ஆகஸ்ட்டில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 862 இரு சக்கர வாகங்களை உள்நாட்டில் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. 2024 ஆகஸ்ட்டில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 73 2-வீலர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

tvs motor 2-wheeler sales

கடந்த மாதத்தில் டிவிஎஸ் விற்பனை செய்த ஒட்டுமொத்த 5,09,536 வாகனங்களில் 25 ஆயிரத்து 138 எலக்ட்ரிக் வாகனங்கள் அடங்குகின்றன. இந்த எண்ணிக்கை ஆனது 2024 ஆகஸ்ட்டில் 24 ஆயிரத்து 779 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் வெறும் 359 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விற்பனை செய்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் 3-வீலர் வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 748 டிவிஎஸ் 3-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 747 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 3-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 47% அதிகரித்து உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அதிலிலும் கடந்த ஆகஸ்ட் மாத டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒருவழியாக ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனையில் 5 லட்சத்தை டிவிஎஸ் கடந்துள்ளதால், அதனை தக்க வைத்துக் கொள்ளவே வரும் காலங்களில் முயற்சிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 1, 2025, 16:40 [IST]
English summary
Tvs motor achieves its highest ever sales in august 2025 check all details here
மேலும்... #tvs motor #sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X