டிவிஎஸ் கம்பெனிக்கு ரொம்ப தாராள மனசு... புதிய விலை சுமார் ரூ.27 ஆயிரம் வரை கம்மி!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தனது முதன்மை அப்பச்சி (Apache) ரக பைக்குகளான ஆர்ஆர் 310 (RR 310) மற்றும் ஆர்.டி.ஆர் 310 (RTR 310) ஆகிய மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன் மூலமாக, விலையுயர்ந்த இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை இன்னும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மத்திய அரசாங்கம் அண்மையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 அன்று அமலுக்கு வந்த புதிய இரு அடுக்கு ஜிஎஸ்டி திருத்தம், சில பிரிவுகளுக்கான மறைமுக வரி விகிதங்களைக் குறைத்துள்ளது.

tvs rr310 and rtr310 bikes price cut

இதன் பலனை வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி அமைப்புக்கு இணங்க, ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் டிவிஎஸ் நிறுவனம், தனது அப்பச்சி வரிசையிலான பைக்குகளின் விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விலை மாற்றங்கள் உத்தரகாண்ட் மாநிலத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

உத்தராகண்ட் மாநிலத்திற்கான தனிப்பட்ட விலைப் பட்டியலும், ஒவ்வொரு அப்பாச்சி பைக்கிலும் குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தொகையும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அப்பச்சி ஆர்ஆர் 310 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price), கியர் குயிக் ஷிஃப்டர் (Quick Shifter) இல்லாத ரேசிங் ரெட் நிறத்திலான வேரியண்டிற்கு ரூ.2.56 லட்சம் முதல் துவங்குகிறது.

DESCRIPTION COLOR GST revised price GST SAVINGS UPTO
ALL OTHER STATES UTTARAKHAND
RR 310 NON-BTO RACING RED 256240 257640 21759
RACING RED 271940 273290 23059
BOMBER GREY 276540 277940 23459
RR 310 BTO RACING RED 288540 289890 24,459
BOMBER GREY 293140 294490 24,859
RACE REPLICA 302340 303740 25,659
RACING RED 286690 288040 24,309
BOMBER GREY 291290 292690 24,709
RACE REPLICA 300490 301890 25,509
RACING RED 303290 304640 25,709
BOMBER GREY 307890 309240 26,109
RACE REPLICA 317090 318490 26,909
RR 310 ANNIVERSARY EDITION ANNIVERSARY EDITION DYNAMIC + DYNAMIC PRO KIT)
GLOSSY BLACK & GOLD 310640 312040 26,360

ஆர்ஆர் 310 பைக்கில், தேர்வு செய்யப்படும் கிட் மற்றும் வண்ணத்தைப் பொறுத்து சுமார் ரூ.21,700 முதல் ரூ.27,000 வரை சேமிப்பு கிடைக்கிறது. ரேஸ் ரெப்ளிகா டைனமிக் பேக்கேஜ்கள் மற்றும் பளபளப்பான கருப்பு மற்றும் தங்க நிறத்திலான ஆண்டுவிழா பதிப்பு போன்ற பிரீமியம் ஆப்ஷன்களில் ஆர்ஆர்310 பைக்கின் புதிய விலைகள் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இவற்றிற்கு அதிகபட்ச வரி குறைப்பு கிடைத்துள்ளது. இதேபோல், அப்பச்சி ஆர்.டி.ஆர் 310 பைக்கிலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கியர் குயிக் ஷிஃப்டர் இல்லாத அடிப்படை ஆர்சனல் பிளாக் (Arsenal Black) பதிப்பு இப்போது ரூ.2.21 லட்சத்திற்கு கிடைக்கிறது. இது முன்பை விட சுமார் ரூ.19,000 வரை குறைவாகும்.

Model Name Variant Name ColorName GST revised price GST SAVINGS UPTO
ALL OTHER STATES UTTARAKHAND
RTR 310 NON-BTO BASE W/O QS ARSENAL BLACK 221240 222590 18750
BASE WITH QS ARSENAL BLACK 236890 238290 20110
BASE WITH QS FURY YELLOW 236890 238290 20110
BASE WITH QS FIERY RED 241490 242890 20510
RTR 310 BTO DYNAMIC KIT ARSENAL BLACK 253490 254890 21510
FURY YELLOW 253490 254890 21510
FIERY RED 258090 259490 21910
SEPANG BLUE 267290 268690 22710
DYNAMIC PRO KIT ARSENAL BLACK 262690 264090 22310
FURY YELLOW 262690 264090 22310
FIERY RED 267290 268690 22710
SEPANG BLUE 276540 277890 23460
DYNAMIC + DYNAMIC PRO KIT ARSENAL BLACK 279290 280690 23710
FURY YELLOW 279290 280690 23710
FIERY RED 283890 285290 24110
SEPANG BLUE 293140 294490 24860
RTR 310 ANNIVERSARY EDITION APACHE RTR 310-O2B-M25-DYN+DYPR-GBLK GLD 286690 288040 24310
GLOSSY BLACK & GOLD

கியர் குயிக் ஷிஃப்டர், டைனமிக் மற்றும் ப்ரோ கிட்கள் கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.24,800 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பளபளப்பான கருப்பு மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கும் ஆர்.டி.ஆர் 310 பைக்கின் ஆண்டுவிழா பதிப்பு ஆனது திருத்தப்பட்ட வரி விகிதங்களுக்குப் பிறகு ரூ.2.86 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் ஆர்டிஆர்310 என இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான 312சிசி, 4-வால்வு, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, தலைக்கீழான-சரிவான என்ஜின் பொருத்தப் படுகிறது. ஆனால், இந்த என்ஜின் இந்த இரு 310சிசி டிவிஎஸ் அப்பச்சி பைக்குகளுக்கு வழங்கும் ஆற்றல் அளவுகள் வேறுப்படுகின்றன.

tvs rr310 and rtr310 bikes price cut

அதாவது, ஆர்ஆர்310 பைக்கில் 9,800 ஆர்பிஎம்-இல் 37.48 பிஎச்பி மற்றும் 7,900 ஆர்பிஎம்-இல் 29 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இதே என்ஜின் ஆர்டிஆர்310 பைக்கில் 9,700 ஆர்பிஎம்-இல் 35.08 பிஎச்பி மற்றும் 6,650 ஆர்பிஎம்-இல் 28.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலை குறைப்பு நடவடிக்கையானது வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரீமியம் பைக் பிரிவில் மதிப்புமிக்க விருப்பங்களைத் தேடும் இளம் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை இது கவரும் என்று கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2025, 10:27 [IST]
English summary
Tvs motor announced rr310 and rtr310 bikes revised price list post gst rate revision
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+