தமிழ்நாட்டு தயாரிப்புகளை பார்த்து நாடே மிரண்டுபோக போகுது! ஆட்டோ எக்ஸ்போ தான் இப்போ எல்லாரது கவனமும்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாட்டு முன்னணி 2-வீலர் & 3-வீலர் நிறுவனம். ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. மேலும், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் டிவிஎஸ் வாகனங்கள் பல வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கும் டிவிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை போல், ஜனவரி 17இல் துவங்கவுள்ள 2025 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்தியாவின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்துக் கொள்ளவுள்ளன. அவற்றுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டாரும் தனது தயாரிப்புகளை காட்சிக்கு நிறுத்த உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி சுருக்கமாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

tvs at auto expo 2025

டிவிஎஸ் ரோனின் டி.எஸ் (Ronin DS): டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள 2025 ரோனின் டிஎஸ் மோட்டார்சைக்கிள் ஆனது ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டில் கோவாவில் நடைபெற்ற மோட்டோசோல் (MotoSoul) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, இந்த 2025 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

அதாவது, பைக்கை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படும். மோட்டோசோல் 2024 கண்காட்சியில் ட்யூயல்-பர்பஸ் டயர்கள், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், டிவிஎஸ் எக்ஸோனெக்ட் ஸ்மார்ட்போன் கனெட்டிவிட்டி மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் க்ளை-த்ரூ-டெக்னாலஜியை கொண்டிருந்தது. கிளாசியர் சில்வர் மற்றும் சோர்கோல் எம்பர் என்கிற 2 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக்கின் விலைகள் ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிவிக்கப்படலாம்.

tvs at auto expo 2025

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி யுஎஸ்டி ஃபோர்க் (Apache RTR160 4V USD Fork): மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பைக் மீண்டும் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 37மிமீ-இல் யுஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனை பெற்றுள்ள இந்த பைக் மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிவிஎஸ் அட்வென்ச்சர் பைக் (Adventure Bike): மேற்கூறப்பட்ட இரு பைக்குகள் மட்டுமில்லாமல், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் புத்தம் புதிய அட்வென்ச்சர் பைக் ஒன்றையும் டிவிஎஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. டிவிஎஸ் நிறுவனம் புதியதாக உருவாக்கிய 300சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை இந்த பைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் தீவிர சோதனை ஓட்டங்களில் உள்ள இந்த புதிய டிவிஎஸ் அட்வென்ச்சர் பைக்கில் நீளமான டிராவலை கொண்ட சஸ்பென்ஷன், ரைடிங் மோட்கள் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம். ஏனெனில், அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு இந்த வசதிகள் தேவையான ஒன்றாகும். விற்பனையில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இந்த டிவிஎஸ் பைக் போட்டியாக இருக்கும்.

டிவிஎஸ் ரோனின் கஸ்டம் பைக்குகள்: 2024 மோட்டோசோல் கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் சில கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட பைக்குகளையும் காட்சிப்படுத்தி இருந்தது. இவை டிவிஎஸ் ரோனின் பைக்கை அடிப்படையாக கொண்டவைகளாக இருந்தன. அதாவது, கஸ்டமர்கள் விருப்பப்பட்டால் ரோனின் பைக்கை இவ்வாறு கூட மாற்றிக் கொள்ளலாம் என டிவிஎஸ் தெரிவித்து இருந்தது. அந்த கஸ்டம் பைக்குகள் 2025 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் மோட்டார் சார்பில் இவை எல்லாம் பார்வையாளர்களின் முன் காட்சிக்கு நிறுத்தப்படலாம் என ஒரு யூகத்தில் தான் கூறுகிறோம். என்னென்ன 2-வீலர்களை டிவிஎஸ் காட்சிப்படுத்தும் என்பது ஆட்டோ எக்ஸ்போ துவங்கிய பின்பே தெரியவரும். இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்காத புதிய 2-வீலர்களை கூட டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 20:33 [IST]
English summary
Tvs motor at auto expo 2025 may showcase this bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+