ரூ. 76,691க்கு விற்பனைக்கு வந்திருக்கு டிவிஎஸ் ஜுபிடர்.. எது மைலேஜை இவ்ளோ தருமா?.. ஆக்டிவா ஓரமா போ...
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ஜூபிடர் (Jupiter) உள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜுபிடர் 110 (Jupiter 110) மற்றும் ஜுபிடர் 125 (Jupiter 125) ஆகியவையே அவை ஆகும். இதில், ஜுபிடர் 110 மாடலே தற்போது புதுப்பிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுக ரூ. 76,691 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் மாடல் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் (Drum), டிரம் அலாய் (Drum Alloy), டிரம் எஸ்எக்ஸ்சி (Drum SXC) மற்றும் டிஸ்க் எஸ்எக்ஸ்சி (Disc SXC) ஆகியவையே அவை ஆகும். இதில் டிரம் என்பதே ஆரம்ப நிலை வேரியண்டாக உள்ளது.

இதற்கே 76,691 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த வேரியண்டான டிரம் அலாய்-க்கு ரூ. 82,441-ம், டிரம் எஸ்எக்ஸ்சி வேரியண்டிற்கு ரூ. 85,991-ம் மற்றும் டிஸ்க் எஸ்எக்சி வேரியண்டிற்கு ரூ. 89,791-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
புதுப்பித்தலின்கீழ் இந்த ஸ்கூட்டர் மாடலில் மிக முக்கியமான மாற்றமாக எஞ்சினை ஓபிடி-2பி (On-Board Diagnostics) விதிகளுக்கு ஏற்ப அப்கிரேட் செய்திருக்கின்றனர். இந்த விதி, நிகழ்காலத்தில் வாகனம் என்ன மாதிரியான அளவில் காற்றை மாசுப்படுத்தும் என்கிற அளவை துள்ளியமாகக் காண்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகின்றது.
ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் இதற்காக சில பிரத்யேக சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அது வாகனத்தின் த்ரோட்டில், எஞ்சினுக்கு காற்று மற்றும் எரிபொருள் என்ன அளவில் கலக்கப்படுகின்றது, எஞ்சினின் வெப்பம் மற்றும் வேகம் போன்றவற்றைத் தொடர்ந்துக் காண்கானிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குடும்பஸ்தர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான ஓர் ஸ்கூட்டர் மாடலே ஜுபிடர் 110 ஆகும்.
இதன் ஸ்டைல் இளைஞர்களைக் குறி வைக்கும் வகையிலும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக 1,275 மிமீ அளவில் வீல்பேஸ்-ம், 163 மிமீ அளவில் கிரவுண்டு கிளியரன்ஸும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த வாகனத்தை இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக மாற்றியிருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை 113.3 சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 5.9 kW பவர் மற்றும் 9.2 என்எம் முதல் 9.8 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஓபிடி-2பி தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்டு இருப்பதால் இது கொஞ்சம் அதிகம் மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர, ரைடர்களின் சௌகரியமான டிராவல் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வசதியை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றனர். இத்துடன், இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜையும், ஐ-கோ அசிஸ்ட், ஹசார்டு லைட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட சிறப்புகளை இது தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வருகை ஹோண்டா ஆக்டிவா 110 மாடலுக்கு நேரடி போட்டியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர் மாடலாக ஜுபிடர் 110 மாடல் உள்ளது. இதற்கு வரும் நாட்களில் இரட்டிப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப சிறப்பான அப்டேட்டை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றனர். இது லிட்டருக்கு 60 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








