நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் டிவிஎஸ்.. கெத்தா சொல்லிக்கோங்க இது நம்ம தமிழ்நாட்டு நிறுவனம்னு.. தரமான சம்பவம்!

நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது, டிவிஎஸ் (TVS Motor). 2024 ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 2025 ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் வாகனங்கள் 17 சதவீதம் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. எண்களின் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனத்தின் புதிய வாகனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் 397,623 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த ஆண்டு ஜனவரியில் 339,513 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது.

தற்போது நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கும் அதிகபடியான வரவேற்பு டிவிஎஸ்-க்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக வாசிகளுக்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, தமிழகத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா என்றே பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்திற்கும் சென்ற ஜனவரி மாதத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

Tvs reports growth in january 2025 sales

குறிப்பாக, நல்ல எண்ணிக்கையில் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதன் விளைகாவே அந்த நிறுவனத்தால் 2025 ஜனவரியில் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம் விற்பனையை பெற முடிந்திருக்கின்றது. ஒட்டுமொத்த விற்பனையான 397,623 யூனிட்டுகளில் 387,671 யூனிட்டுகள் டூ-வீலர்கள் ஆகும்.

ஆமாங்க, இந்த பிரமாண்ட எண்ணிக்கையிலேயே 2025 ஜனவரியில் டிவிஎஸ்-இன் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில், 2024 ஜனவரியில் 329,937 யூனிட்டுகள் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதைவிட 18 சதவீதம் அதிகமாகவே கடந்த ஜனவரியில் டிவிஎஸ் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

அதேவேளையில், உள்நாட்டில் விற்பனையானவை 293,860 யூனிட்டுகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. சென்ற ஆண்டு ஜனவரியில் அது 268,233 யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதைபோலவே நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. சுமார் 55 சதவீத விற்பனை வளர்ச்சியை அவை 2024 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2025 ஜனவரியில் பெற்றிருக்கின்றன.

அதாவது, கடந்த ஆண்டு ஜனவரியில் 16,276 யூனிட்டுகளாக இருந்த டிவிஎஸ் இ-வாகனங்களின் விற்பனை 2025 ஜனவரியில் அது 25,195 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. இவ்வாறே ஒவ்வொரு பிரிவிலும் டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், 2025 ஜனவரி மாதம் நிறுவனத்திற்கு மறக்க முடியாத மாதமாக மாறியிருக்கின்றது.

இதே டிமாண்ட் அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் நிறுவனத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு நிலவிக் கொண்டிருக்கும் வரவேற்பு வரும் நாட்களில் இரட்டிப்படையும் என நம்பப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடலாக ஐக்யூப் (iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இருக்கின்றது.

இது சந்தையில் ரூ. 84,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே நீண்ட நாள் எதிர்பார்ப்பான 'எக்ஸ்' (X) இ-ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை சமீபத்தில் டிவிஎஶ் நிறுவனம் தொடங்கியது. இது ஓர் பிரீமியம் தர இ-ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் விலை ரூ. 2.49 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து என இன்னும் சில மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை டிவிஎஸ் நாட்டில் விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக இ-வாகன மார்க்கெட்டில் தன்னுடைய இருப்பை அது மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 21:22 [IST]
English summary
Tvs motor company reports 17 percent growth in january 2025 sales
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+