நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும் டிவிஎஸ்... இப்போ பிஸ்னஸ் எந்த அளவில் இருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. தமிழ்நாட்டில் இருந்து உலகளவில் செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு ஓசூரில் வாகன உற்பத்தி தொழிற்சாலை இருப்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இந்தியாவை தாண்டி, இந்தோனிஷியா (Indonesia) நாட்டிலும் இந்த நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த அளவிற்கு மல்டி-நேஷ்னல் கம்பெனியாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வருவாயில் 10% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலையை வைத்து பல உள்ளூர் தனியார் நிறுவனங்கள் உலகளவில் கோலோச்சி உள்ளன. அவற்றுள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தையும் ஒன்றாக சொல்லலாம். இந்த நிறுவனத்தின் வருவாய் ஆனது கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 10% அதிகரித்து உள்ளது.

tvs motor company s revenue grows

2024 அக்டோபர்- டிசம்பர், இந்த 3 மாதங்களில் சுமார் ரூ.9 ஆயிரத்து 97 கோடி வருவாயை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் இதே கடைசி 3 மாத வருவாயை விட 10% அதிகமாகும். ஏனெனில், அந்த 3 மாதங்களில் ரூ.8 ஆயிரத்து 245 கோடி வருவாயை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெற்றிருந்தது.

முதலீடுகள் எல்லாம் கழிய, 2024ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் இலாபம் என்று பார்த்தால், ஆயிரத்து 81 கோடி ரூபாய். மொத்த வருவாயான ரூ.9,097 கோடியில் இது 11.9% ஆகும். மேலும், இது 2023ஆம் ஆண்டை (ரூ.924 கோடி) விட 17% அதிகமாகும். இந்த ரூ.1,081 கோடியில், சேதாரங்களுக்காக செலவிடப்பட்ட தொகை, கடனுக்கு செலுத்தப்பட்ட வட்டிகள் மற்றும் வருமான வரி தொகைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

tvs motor company s revenue grows

வருமான வரியை மட்டும் விட்டு மற்றவை இரண்டையும் கழித்துவிட்டால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இலாபம் ரூ.837 கோடி ஆகும். 2023ஆம் ஆண்டில் ரூ.775 கோடி மட்டுமே இலாபமாக இருந்தது. ஆனால் அதேநேரம், டிவிஎஸ் மோட்டார் வைத்துள்ள சொத்துக்களின் மதிப்பானது ரூ.65 கோடியில் இருந்து ரூ.41 கோடியாக குறைந்துள்ளது.

2024ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் மொத்தம் 12.12 லட்ச வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் 2-சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, 3-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. இந்த 12.12 லட்சம் வாகனங்கள் என்பது 2023இன் கடைசி 3 மாதங்களை காட்டிலும் 10% அதிகமாகும். ஏனெனில், அந்த வருடத்தில் 11.01 லட்ச வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

tvs motor company s revenue grows

2-வீலர்கள் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், 2024இன் கடைசி 3 மாதங்களில் 5.56 லட்ச பைக்குகளும், 4.93 லட்ச ஸ்கூட்டர்களும் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 76 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடங்குகின்றன. டிவிஎஸ் நிறுவனத்தின் 3-வீலர் விற்பனையை பொறுத்தவரையில், மேற்கூறப்பட்ட 3 மாதங்களில் 29 ஆயிரம் 3-வீலர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. 2023ஐ விட இது 9 ஆயிரம் யூனிட்கள் குறைவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3-வீலர் விற்பனையை தவிர்த்து, டிவிஎஸ் மோட்டாரின் மற்ற வணிகங்கள் அனைத்தும் ஏறுமுகமாக உள்ளன. இதனால், 3-வீலர் விற்பனை சரிவையும் டிவிஎஸ் நிறுவனம் பெரியதாக எடுத்துக் கொள்ளாது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் அதிக வரவேற்பு டிவிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2025, 8:00 [IST]
English summary
Tvs motor companys revenue grows by 10 percent in last 3 months of 2024
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X