தமிழ்நாட்டு டிவிஎஸ் கம்பெனி 20 வருஷத்துக்கு முன்ன போட்ட சிறிய விதை! ஓசூர் ஆலை இல்லைனா இது நடந்திருக்காது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான 2-வீலர்கள் (2-Wheelers) விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், பிரபலமானது மற்றும் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது என்றால் அது டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் (Apache Bikes) ஆகும். 160சிசி என்ஜினில் இருந்து 310சிசி வரையிலான என்ஜின் ஆப்ஷன்களில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை எல்லாம் துவங்கியது 2005ஆம் ஆண்டில் ஆகும். ஆக... டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை டிவிஎஸ் நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில், இத்தனை வருடங்களில் எத்தனை அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துக்கு பல்சர் (Pulsar) பைக்குகள் எந்த அளவிற்கு பிரபலமானதாக விளங்குகிறதோ, அதே அளவிற்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அடையாளமாக அப்பாச்சி பைக்குகள் விளங்குகின்றன. இதனால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை பற்றி தெரியாதவர்களுக்கு கூட அப்பாச்சி பைக்குகளை பற்றி தெரிந்துள்ளது.

tvs apache bike sales report

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் அதே அளவிற்கு வெளிநாடுகளுக்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சுமார் 60க்கும் அதிகமான நாடுகளுக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனாலேயே தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலை ஆனது எந்நேரமும் அப்பாச்சி பைக்குகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்த வண்ணம் உள்ளது. இதற்கேற்ப அப்பாச்சி பைக்குகளின் விற்பனையும் உலகம் முழுக்க சிறப்பாக இருந்து வருகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதன்முதலாக 2005ஆம் ஆண்டில் தனது முதல் அப்பாச்சி பைக்கை அறிமுகம் செய்தது.

tvs apache bike sales report

2005இல் டிவிஎஸ் நிறுவனம் முதலாவதாக அறிமுகம் செய்த அப்பாச்சி பைக், அப்பாச்சி 150 ஆகும். இந்த 20 வருடங்களில், உலகளவில் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை ஆனது 60 இலட்சம் என்கிற இமாலய எண்ணிக்கையை கடந்துள்ளது. கடந்த 20 வருடங்களில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளன.

குறிப்பாக, கடந்த சில வருடங்களாக விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான 310சிசி அப்பாச்சி பைக்குகளிலும் டிவிஎஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அப்பாச்சி ஆர்.ஆர்310 (RR310) என்கிற ஸ்போர்ட்ஸ் ரக பைக் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 (RTR310) பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

tvs apache bike sales report

இது இல்லாமல், அடுத்ததாக அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ் 300 (RTX300) என்கிற அட்வென்ச்சர் ரக பைக்கையும் அறிமுகம் செய்ய டிவிஎஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. மற்ற அப்பாச்சி பைக்குகளை தனியாளாக தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 310சிசி அப்பாச்சி பைக்குகளை மட்டும் பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குகிறது.

இதனால், 310சிசி அப்பாச்சி போன்றதான பைக்குகள் பிஎம்டபிள்யூ பிராண்டின் கீழும் விற்பனை செய்யப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி 150 பைக் இப்போது விற்பனையில் இல்லை. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அப்பாச்சி பைக்குகள் என்று பார்த்தால், அப்பாச்சி ஆர்டிஆர்160, அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர்180, அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி, அப்பாச்சி ஆர்டிஆர்310 மற்றும் அப்பாச்சி ஆர்.ஆர்310 உள்ளிட்டவை ஆகும்.

tvs apache bike sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'டிராக் டூ ரோடு' என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்குவதில் இருந்தே இந்த பைக்குகளின் தரத்தை அறியலாம். ஏனெனில், 'டிராக் டூ ரோடு' என்பது ரேஸ் டிராக்கில் இருந்து சாதாரணமான சாலை வரையில் அப்பாச்சி பைக்குகளை கொண்டு செல்லலாம் என்பதை குறிக்கிறது. அப்பாச்சி பைக்குகளுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல டிமாண்ட் உள்ளதால், இன்னும் பல வருடங்களுக்கு அப்பாச்சி பைக்குகளின் இராஜ்ஜியம் இருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 11:21 [IST]
English summary
Tvs motor crossed 60 lakhs global apache bike sales in 20 years
மேலும்... #tvs motor #tvs apache #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X