எத்தனை இளைஞர்கள் பைக் மீது பைத்தியமா சுத்த போறாங்களோ! டிவிஎஸ் அப்பாச்சி பைக் இதுனு சொன்னா நம்ப முடிகிறதா?

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் விற்பனை செய்யும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது அதன் அப்பாச்சி (Apache) பைக்குகள் என்றால், அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு பெரிய அளவிலான கிரேஸ் உள்ளது. தற்சமயம் 160சிசி-இல் இருந்து 310சிசி வரையிலான என்ஜின்களுடன் அப்பாச்சி பைக்குகள் கிடைத்தாலும், அப்பாச்சி ஆர்டிஆர்200 (RTR200) பைக்கை தான் கஸ்டமர்கள் அதிகம் பேர் வாங்குகின்றனர்.

இதனாலேயே அவ்வப்போது, அப்பாச்சி பைக்குகளை அப்டேட் செய்துவிடும் டிவிஎஸ் நிறுவனம் அந்த வரிசையில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கில் குறிப்பிடத்தக்க சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2025 tvs apache rtr200 launched

அவற்றுள் முக்கியமானது, பைக்கின் தோற்றம் ஆகும். வழக்கம்போல், புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கும் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளது. ஆனால், இந்த முறை கருப்பு நிறத்தை கொஞ்சம் அதிகமாக கொடுத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், பைக்கின் பின்பகுதி முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. முன்பக்கத்தில் மட்டுமே கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த கலவையாக உள்ளன.

வித்தியாசமாக, இந்த முறை புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கின் முன் சக்கரம் சிவப்பு நிறத்திலும், பின் சக்கரம் கருப்பு நிறத்திலும் உள்ளன. இதற்கேற்ப பைக்கின் பெட்ரோல் டேங்கில் வழங்கப்படும் கிராஃபிக்ஸ் (Graphics) மாற்றப்பட்டுள்ளது. வழக்கம்போல், 'RTR' என்கிற எழுத்துக்கள் அளவில் பெரியதாக பெட்ரோல் டேங்கின் மீது வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், புதிய ஆர்டிஆர்200 பைக்கில் இந்த 'RTR' எழுத்துக்கள் பார்த்தவுடனே தெரிய அளவிற்கு இல்லாமல், கொஞ்சம் குழப்பமான டிசைனில் உள்ளது. இருப்பினும் இந்த கிராஃபிக்ஸ் டிசைன் நன்றாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். மேட் பிளாக், பளபளப்பான கருப்பு மற்றும் கிரானைட் கிரே என்கிற மூன்று விதமான புதிய கலர் ஆப்ஷன்களில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவை புதிய 2025 மாடலில் 37மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கேற்ப பைக்கின் ஹேண்டில்பாரும் மாற்றப்பட்டு உள்ள நிலையில், புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கில் மூன்று ரைடிங் மோட்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர்த்து, அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. புதிய 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 990இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. செயல்படுதிறனை பொறுத்தவரையில், அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் என்ஜின் தான் புதிய மாடலிலும் தொடரப்பட்டுள்ளது.

இந்த வகையில், இந்த 200சிசி அப்பாச்சி பைக்கில் பொருத்தப்படும் 197.75சிசி ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர், ஃபியுல்-இன்ஜெக்டட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 20.8 பிஎஸ் மற்றும் 7,250 ஆர்பிஎம்-இல் 17.25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே வாகனத்தில் சக்கரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறான நிறங்களில் எதிர்காலத்தில் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்காலத்திற்குள் மெல்ல மெல்ல நாம் நுழைந்துக் கொண்டிருக்கும் என்பது புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கின் அறிமுகத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த புதிய அப்பாச்சி பைக்கில் பல அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு இருப்பினும், அவற்றுள் முக்கியமானதாக இரு வேறு நிறங்களிலான அலாய் சக்கரங்களை பார்க்கிறோம். இது குறிப்பாக இளம் தலைமுறையினரை கவர்ந்து இழுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2025, 23:59 [IST]
English summary
Tvs motor launched apache rtr200 with impressive updates check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+