டிவிஎஸ் கம்பெனியில் இப்படியொரு ஸ்கூட்டரை தான் எதிர்பார்த்தோம்... தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவது தான் ஸ்பெஷலே!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'எண்டார்க் 150' (Ntorq 150) ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்டதாகவும் புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் 'ஹைப்பர் ஸ்போர்ட்' (Hyper Sport) ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.1.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விற்பனையில் யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹீரோ ஸூம் 160 (Hero Xoom 160) ஸ்கூட்டர்களுக்கு புதிய எண்டார்க் 150 போட்டியாக இருக்கும்.

tvs ntorq 150 scooter

புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரில் 149.7சிசி, 3-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 13.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. 0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 104கிமீ ஆகும்.

இதன் மூலமாக, இந்தியாவிலேயே அதிவேகமான 150சிசி ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 அறியப்படுகிறது. எண்டார்க் 125 ஸ்கூட்டரின் அதே சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் சுருள்கள் செயல்படும் விதம் மற்றும் டேம்பிங் (Damping) உள்ளிட்டவை எல்லாம் மாற்றப்பட்டு உள்ளன.

12 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்ட புதிய எண்டார்க் 125 ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக் பணியை கவனிக்க, முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (ABS) வசதியையும் எண்டார்க் 150 ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் பெறலாம்.

தோற்றத்தை பொறுத்தவரையில், விமானங்களை போன்றதான முகப்பு பகுதியை கொண்ட புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரில் குவாட் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் ஸ்கூட்டருக்கு நன்கு மேலாக வழங்கப்பட்டு உள்ளன. இந்த குவாட் எல்இடி ஹெட்லைட்களுக்கு இரு பக்கங்களிலும் டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஸ்கூட்டருக்கு பின்பக்கத்தில் எண்டார்க் ஸ்கூட்டர்களுக்கே உண்டான டிசைனில் இரண்டாக பிளவுப்பட்ட டிசைனில் டெயில்லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஏரோடைனாமிக் விங்லெட்ஸ், நேக்டு ஹேண்டில்பார், வண்ண நிறங்களில் அலாய் சக்கரங்கள் மற்றும் ஸ்டப்பியான மஃப்லர் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

ஸ்கூட்டரின் அலாய் சக்கரங்கள் வண்ண நிறங்களில் இருப்பது மட்டுமின்றி, எடை குறைவானவை ஆகவும் உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், ஜெட் விமானங்களில் இருப்பதை போன்று ஸ்கூட்டரை சுற்றிலும் ஆங்காங்கே துளைகள் வழங்கப்பட்டு உள்ளன. ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது 50க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா டியோ (Honda Dio) போன்ற பிரபலமான ஸ்கூட்டருக்கு போட்டியாக இருந்தாலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எண்டார்க் 125 ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. பல அசத்தலான அம்சங்கள் உடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதால், எண்டார்க் 150 ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 4, 2025, 17:12 [IST]
English summary
Tvs motor launched ntorq 150 in india price features all details here
மேலும்... #tvs motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+