இளைஞர்கள் எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்க போகுதோ... டிவிஎஸ் மோட்டாரின் புதிய அப்பாச்சி பைக்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்310 (Apache RTR310) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் உதவியுடன் டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இணைந்து பல பவர்ஃபுல்லான பைக்குகளை கடந்த காலங்களில் இருந்து உருவாக்கி வருகின்றன. இதன் மூலமாக இந்த இரு நிறுவனங்களும் பலனை அனுபவித்து வருகின்றன. இந்த வரிசையில், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக் தான், அப்பாச்சி ஆர்டிஆர்310 ஆகும்.

அதற்கு முன் வரையில், அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் உதவியுடன் டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துவந்த நிலையில், மற்றொரு புதிய மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர்310 அறிமுகம் செய்யப்பட்டது. கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke), டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400) பைக்கிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட போதிலும் ஆர்டிஆர்310 பைக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்களான நிலையில் புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ், டாப், பிடிஓ கிட் 1 மற்றும் பிடிஓ கிட் 2 என நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.34 லட்சத்தில் இருந்து ரூ.2.85 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. பேஸ் வேரியண்ட்டிலேயே ஏகப்பட்ட எலக்ட்ரானிக் வசதிகள் வழங்கப்படும் நிலையில், டாப் வேரியண்ட்டில் கூடுதலாக பை-டைரக்ஷ்னல் குயிக்-ஷிஃப்டர் (bi-directional quick-shifter) கிடைக்கும். இதனால்தான், அதன் எக்ஸ்-ஷோரூம் விலை சற்று கூடுதலாக ரூ.2.57 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிடிஓ வேரியண்ட்களில் அவற்றின் கூடுதல் விலைக்கு ஏற்ப கூடுதலான ஆக்ஸஸரீகள் உடன் இந்த அப்பாச்சி பைக்கை பெறலாம். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் கடந்த 2024ஆம் ஆண்டிலும், இந்த 2025ஆம் ஆண்டிலும் அப்டேட் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அதே மாற்றங்கள் தான் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவற்றுள் முக்கியமானது, சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதியாகும். இது இந்தியாவில் 300- 350சிசி பைக் ஒன்றில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஃபியர்ரி சிவப்பு, அர்செனல் கருப்பு, ஃபுரி மஞ்சள் மற்றும் செபாங் நீலம் என நான்கு கலர் ஆப்ஷன்களில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் அப்பாச்சி பைக்குகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என்பது அவற்றை அவ்வப்போது அப்டேட் செய்வதில் இருந்து அறிய முடிகிறது. அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை தான் அடிக்கடி டிவிஎஸ் நிறுவனம் மேம்படுத்தி வந்த நிலையில், தற்போது அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கையும் அப்டேட் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த அப்டேட்களினால் இந்த பைக்கின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








