ஓசூர் ஆலையில் உருவாக்கப்பட்ட புதிய அப்பாச்சி பைக் அறிமுகம்! ரைட் மோடுகளை முக்கியமா டிவிஎஸ் வழங்கி இருக்கு!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்160 (Apache RTR160) மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போதுமே அப்பாச்சி பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், அப்பாச்சி பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மறப்பது இல்லை. அந்த வகையில் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை மேம்படுத்தி டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக ஒபிடி-2பி (OBD-2B) அப்டேட்கள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் இந்த அப்டேட்டை அரசாங்கம் உன்னிப்பாக கவனிப்பதால், ஒபிடி-2பி அப்டேட் கடந்த வருடத்தில் இருந்து பல்வேறு பைக் & ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2025 tvs apache rtr160 launched

அந்த வகையில், 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கிலும் ஒபிடி-2பி அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் மற்றொரு முக்கியமான அம்சமாக ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 160சிசி பைக்குகள் பெரும்பாலானவற்றில் இந்த ஆண்டி-பிரேக் சிஸ்டம் (ஏபிஎஸ்) வழங்கப்படுவது இல்லை.

2025 அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,34,320 ஆக உள்ளது. இது முந்தைய ஆர்டிஆர்160 பைக்கின் விலைமிக்க ரேசிங் (Racing) எடிசனின் விலையை காட்டிலும் வெறும் ரூ.4,000 மட்டுமே அதிகமாகும். புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் ரைடு மோட்கள் மற்றும் எல்சிடி கன்சோல் திரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மொபைல் போன் அலார்ட்ஸ் மற்றும் பயணத்திற்கான வழிக்காட்டுதலுக்கு டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் செயலி மூலமாக பயன்படுத்தக் கூடிய ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் 159.7சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 15.82 பிஎச்பி மற்றும் 13.85 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆர்டிஆர்160 பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் மழை என மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 137 கிலோ எடை கொண்ட புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் 13 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

டபுள் கிராடில் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள 2025 அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு மூலமாக செயல்படக்கூடிய ஷாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணியை கவனிக்க பைக்கின் முன் சக்கரத்தில் 270மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலமான டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுள் ஒன்று ஆர்டிஆர்160 ஆகும். இத்தகைய பைக்கில் புதியதாக அப்டேட் கொண்டுவரப்பட்டு இருப்பதன் மூலம், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேட் கருப்பு அல்லது பேர்ல் வெள்ளை நிறத்தில் வாங்கக்கூடிய 2025 அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் உங்களை கவர்ந்தது என்ன என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 28, 2025, 21:24 [IST]
English summary
Tvs motor launches 2025 apache rtr160 in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+