இந்த கலரில் யார்கிட்டயும் டிவிஎஸ் ஸ்கூட்டர் இருக்காது! வாங்கி போட்டா ஏரியாவில் கெத்து காட்டலாம்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்று, எண்டார்க் (Ntorq) ஆகும். டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக டிவிஎஸ் எண்டார்க் விளங்குகிறது. இந்த நிலையில், எண்டார்க் ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக இந்த ஸ்கூட்டரின் புதிய ஸ்பெஷல் எடிசனை (Special Edition) டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
'சூப்பர் சோல்சர் எடிசன்' (Super Soldier Edition) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எண்டார்க் ஸ்கூட்டர் ஆனது பிரபல ஹாலிவுட் (Hollywood) திரைப்பட தொடரான மார்வல் அவெஞ்சர்ஸ் (Marvel Avengers) ஆல் கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டது ஆகும். இதனை ஸ்கூட்டரின் மீது வழங்கப்பட்டு இருக்கும் கிராஃபிக்ஸில் காணலாம்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் எண்டார்க் ஸ்கூட்டரில் இவ்வாறான மார்வல் அவெஞ்சர்ஸ் திரைப்பட கிராஃபிக்ஸை வழங்குவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. கடந்த வருடங்களில் இதுபோன்று ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் புதியதாக சூப்பர் சோல்சர் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய எண்டார்க் சூப்பர் சோல்சர் எடிசன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.98 ஆயிரத்து 117 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் எண்டார்க் ஸ்கூட்டர் டிவிஎஸ் மோட்டாரின் அனைத்து ஷோரூம்களில் கிடைக்கும். மற்றப்படி, பிரத்யேகமான கிராஃபிக்ஸை தவிர்த்து எண்டார்க் சூப்பர் சோல்சர் எடிசனில் வேறெந்த அப்டேட்களும் வழங்கப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டாரின் 125சிசி ஸ்கூட்டரான எண்டார்க் ஏற்கனவே ரேஸ் எடிசன், ரேஸ் எக்ஸ்.பி மற்றும் எக்ஸ்.டி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்டி ஆனது விலையுயர்ந்த எண்டார்க் ஸ்கூட்டர் ஆகும். இவை இல்லாமல், குறைந்த விலையில் டிஸ்க் வேரியண்ட்டிலும் டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டர் கிடைக்கிறது.
டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.96,021இல் இருந்து ரூ.1,12,641 வரையில் கிடைக்கிறது. எண்டார்க் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 125சிசி 3-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 10.2 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 95கிமீ ஆகும்.
எண்டார்க் 125 ஸ்கூட்டரில் முக்கியமான அம்சங்களான ப்ளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன் (Navigation) வசதி, ஸ்கூட்டர் பார்க் செய்யப்பட்டு இருக்கும் இடத்தை அடையாளம் காணும் வசதி மற்றும் பயணம் குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் வசதிகளை டிவிஎஸ் மோட்டாரின் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் (Smart Xonnect) மூலம் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்வல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் உருவாக்கிய மார்வல் தீம் ஸ்கூட்டர்கள் எல்லாமே மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், புதிய எண்டார்க் சூப்பர் சோல்சர் எடிசனும் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








