இந்த விநாயகர் சதுர்த்திக்கு புது டிவிஎஸ் பைக்கை புக்கிங் போட வேண்டியதுதான்! 1 லட்ச ரூபா கூட விலை இல்ல!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு கவனத்தை ஈர்த்திருக்கும் மோட்டார்சைக்கிள், ரைடர் (Raider) ஆகும். ஸ்டைலிஷான தோற்றத்தில் குறைந்த விலையில் 125சிசி பைக்கை வாங்க விரும்புபவர்களை டார்க்கெட் செய்து டிவிஎஸ் கொண்டுவந்த பைக், ரைடர் 125 ஆகும். பின்னர், இதற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் புதியதாக 125சிசி பைக்குகளை கொண்டுவந்தன.
இந்த நிலையில் விற்பனை போட்டியை சமாளிக்கும் பொருட்டு, ரைடர் 125 பைக்கில் புதியதாக 'சூப்பர் ஸ்குவாட் எடிசன்' (Super Squad Edition) என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதுமையான கிராஃபிக்ஸ் டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஆனது ஹாலிவுட் (Hollywood) திரைப்பட கதாபாத்திரங்களின் அடிப்படையில் இத்தகைய கிராஃபிக்ஸ் டிசைனை பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் திரைப்பட தொடரான மார்வலின் கதாபாத்திரங்களான டெட்புல் (Deadpool) மற்றும் வால்வெரைன் (Wolverine)-ஆல் கவரப்பட்டு ரைடர் 125 பைக்கிற்கு இப்படியொரு ஸ்பெஷல் எடிசனை டிவிஎஸ் நிறுவனம் வழங்கி உள்ளது. புதிய ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிசன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.99 ஆயிரத்து 465 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து டிவிஎஸ் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் (Dealership Showrooms) ரைடர் பைக்கில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வருவதால், இந்த நேரத்தில் வாங்குவதற்கு இது சரியான பைக் ஆகும்.
ரைடர் 125 பைக்கில் வழங்கப்படும் வழக்கமான 3-வால்வு என்ஜின் தான் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 11.75 என்.எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்தியாவில் இந்த விலையில் கிடைக்கும் எந்த 125சிசி பைக்கின் என்ஜினிலும் இந்த அளவிற்கு அதிகமான டார்க் திறன் கிடைப்பது இல்லை.
இதே என்ஜின் தான் புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், இந்த ஸ்பெஷல் எடிசனில் பிரத்யேகமாக ஐகோ (iGO) உதவி மற்றும் சுருக்கமாக GTT எனப்படும் க்ளைட் த்ரூ டெக்னாலஜி (Glide Through Technology) வழங்கப்பட்டுள்ளது. இதில், பூஸ்ட் மோட் (Boost Mode) உடன் வழங்கப்பட்டுள்ள ஐகோ உதவியின் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆக்ஸலரேஷனை பெறலாம்.
அதேநேரம், ஜிடிடி மூலம் குறைந்த வேகத்தில் இயங்கும்போதும் தடையற்ற இயக்கத்தையும், கூடுதல் மைலேஜையும் பெறலாம். இவை மட்டுமின்றி, ரிவர்ஸ் எல்சிடி (LCD) திரையும் புதியதாக ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிசன் பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டு உள்ளது. கட்டிங்-எட்ஜ் (Cutting-edge) தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த திரையின் மூலம் பைக்கை மொபைல் போன் (Mobile Phone) உடன் இணைக்கலாம்.
இதன் மூலமாக 85க்கும் அதிகமான வசதிகளை மொபைல் போன் வாயிலாக பைக்கின் திரையில் பெறலாம். புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஆனது டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் வேரியண்ட்கள் வரிசையில் மத்தியில் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, இந்த ஸ்பெஷல் எடிசனை காட்டிலும் விலைமிக்க ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் வேரியண்ட்டும் விற்பனையில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரைடர் 125 பைக்கில் மார்வல்-தீம் எடிசன்களை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 2023 ஆகஸ்ட் மாதத்திலும் இதேபோன்று பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து அயர்ன் மேன் மற்றும் பிளாக் பான்ந்தர் ஸ்பெஷல் எடிசன்களை டிவிஎஸ் அறிமுகம் செய்தது. இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்களை குறிப்பாக, இன்றைய கால ஜென் இசட் இளைஞர்களுக்காக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








