லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தரும் பைக் இன்னும் கம்மியான விலையில்... டிவிஎஸ் நிறுவனத்தை பாராட்டாமல் இருக்க முடியல

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து மக்கள் அதிகம் பேர் வாங்கும் பைக்குகளுள் ஒன்று, ஸ்போர்ட் (Sport) ஆகும். டிவிஎஸ் நிறுவனத்திலேயே மிகவும் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக விளங்குவதால், ஸ்போர்ட்டை மக்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்போர்ட் பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த பைக்கில் புதியதாக விலை குறைவான வேரியண்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2-வீலர்கள் விற்பனையில் மட்டுமின்றி, 3-வீலர்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

tvs motor launches sport es

இத்தகைய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான மோட்டார்சைக்கிள், ஸ்போர்ட் ஆகும். எந்த அளவிற்கு விலை குறைவான டிவிஎஸ் பைக் என்றால், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ (Star City+) மற்றும் ரைடர் 125 (Raider 125) பைக்குகளை காட்டிலும் விலை குறைவானதாக டிவிஎஸ் ஸ்போர்ட் விளங்குகிறது.

இத்தகைய ஸ்போர்ட் பைக்கில் தான் புதியதாக 'இ.எஸ்+' (ES+) என்கிற பெயரிலான வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.60 ஆயிரத்து 881 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் ஏற்கனவே இ.எஸ் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதியதாக இ.எஸ்+ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tvs motor launches sport es

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விலை குறைவான வேரியண்ட்டாக விளங்கும் இ.எஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,881 ஆகும். இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு குறைவான விலையில் பைக்கை விற்பனை செய்யும் போதிலும் ஸ்போர்ட் பைக்கில் அலாய் சக்கரங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்குகிறது. இ.எஸ் என்பது செல்ஃப் ஸ்டார்ட் (Self-Start)-ஐ குறிக்கிறது.

இந்த இரு வேரியண்ட்கள் மட்டுமில்லாமல், இ.எல்.எஸ் (ELS) என்கிற வேரியண்ட்டும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இது சற்று விலைமிக்க டாப் வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.71,785 ஆக உள்ளது. புதிய இஎஸ்+ வேரியண்ட்டை பொறுத்தவரையில், இது இரு விதமான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிரே ரெட் மற்றும் பிளாக் நியான் என்பன அந்த 2 கலர் ஆப்ஷன்கள் ஆகும். இந்த இரு கலர் ஆப்ஷன்களிலும் கிராஃபிக்ஸ் (Graphics) கணக்கச்சிதமாக போதுமான அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் பெட்ரோல் டேங்கில் பைக்கின் என்ஜினின் சிசி-ஐ குறிக்கும் விதமாக '110' என குறிப்பிடப்பட்டு உள்ளது. பைக்கின் ஹெட்லைட் கௌல், முன்பக்க மட்கார்ட் மற்றும் சைடு பேனல்கள் உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்போர்ட் பைக்கின் மற்ற இரு வேரியண்ட்களிலும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான கம்பி சில்வர் நிறத்தில் வழங்கப்படும் நிலையில், புதிய வேரியண்ட்டில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற இரு வேரியண்ட்களில் கிடைக்காத வகையில் இந்த புதிய வேரியண்ட்டில் அலாய் சக்கரங்களின் ரிம்கள் வண்ண நிறங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏழை, எளியோரின் அன்றாட போக்குவரத்துக்கு உற்ற நண்பனாக டிவிஎஸ் ஸ்போர்ட் விளங்குகிறது. இதனாலேயே இந்த விலை குறைவான டிவிஎஸ் பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கும் நிலையில், இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக புதிய இ.எஸ்+ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்போர்ட் பைக் மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 5, 2025, 10:37 [IST]
English summary
Tvs motor launches sport es plus variant in india check price features all details here
மேலும்... #tvs motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+