தமிழகத்திற்கு டாடா காட்டபோகுதா டிவிஎஸ்.. 5 வருஷத்துல கதையே மாறபோது! அண்டை மாநிலத்திற்கு அடுத்த ஜாக்பாட்!

தமிழகத்தை தாயமாகக் கொண்டு வாகன உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company). இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது. இதுவே நமது அண்டை மாநிலத்தில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஆயிரம் கோடி ரூபாயையே அது முதலீடு செய்ய இருக்கின்றது. கர்நாடகா மாநிலத்திற்கே இந்த ஜாக்பாட் அடித்திருக்கின்றது. இங்கேயே இந்த மிகப் பெரிய தொகையை டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது.

சமீபத்தில் அம்மாநிலத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (GIM), இன்வெஸ்ட் கர்நாடகா 2025 நடைபெற்றது. இதில், பங்குபெற்ற டிவிஎஸ், அப்போதே இந்த முதலீடு குறித்த அறிவிப்பை அது வெளியிட்டது. இதற்கான ஒப்பந்தமும் கர்நாடகா அரசுடன் கையொப்பம் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீட்டின்கீழ் கதையையே மாற்ற திட்டமிட்டு இருக்கின்றது டிவிஎஸ். அதாவது, அது புதிய அலுவலக கட்டமைப்பு தொடங்கி பல்வேறு வேலைகளை அம்மாநிலத்தில் செய்ய இருக்கின்றது.

Tvs to invest inr 2000 crore in karnataka

குறிப்பாக, உற்பத்தி ஆலை அமைத்தல், உலகளாவிய திறன் மையம் அமைத்தல் மற்றும் பொறியியல் திறன்களை விரிவுபடுத்துதல் மற்றும் டெஸ்ட் டிராக்குகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றையும் அந்த மாநிலத்தில் டிவிஎஸ் நிறுவனம் செய்ய இருக்கின்றது. இவை அனைத்தும் கர்நாடகா மாநிலத்தின் மைசூரிலேயே அது அமைக்க இருக்கின்றது.

இதில், நிறுவனம் புதிய அலுவலக கட்டமைப்பை அம்மாநிலத்தில் உருவாக்க இருப்பதாக அறிவித்திருப்பதே, நிறுவனம் தமிழகத்தைவிட்டு வெளியேறி கர்நாடகாவிற்கு மாற போகிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்பி இருக்கின்றது. ஆனால், இதுபோன்று ஓர் தாவலை செய்யவிருப்பதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் டிவிஎஸ் இடமிருந்து வெளியாகவில்லை.

உலக அளவில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்து வருவதாலேயே இந்த விரிவாக்கம் பணிகளை அது மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தைத் தாயமாககக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு 58 மில்லியன் பயனாளர்கள் உலக அளவில் இருக்கின்றன. இதுவே உலகின் நான்காவது மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளரும் ஆகும்.

இத்தகைய மாபெரும் வளர்ச்சியின் காரணத்தினாலேயே தன்னுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் பணியில் டிவிஎஸ் நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதலாக வாகனங்களை உற்பத்தி செய்வதோடு இன்னும் அதிகமாக தன்னுடைய சாம்ராஜ்யத்தை அதனால் விரிவாக்கம் செய்துக் கொள்ளவும் முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

தன்னுடைய இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் செய்ய இருக்கின்றது டிவிஎஸ். இதன் வாயிலாக 3,500 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகின்றது. அதேவேளையில், புதிய ஆலை வாயிலாக நிறுவனம் ஆண்டிற்கு 1.5 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்வதையும் இலக்கா நிர்ணயித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் இந்த புதிய செயல்பாடுகளால் அதன் போட்டியாளர்களுக்கு கூடுதல் சவாலான சூழல் உருவாகி இருக்கின்றது. குறிப்பாக, இந்த புதிய ஆலை வாயிலாக நிறுவனம் அதன் மின்சார வாகனங்களின் உற்பத்தி திறனையும் பன்மடங்காக விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற நிறுவனங்களுக்கும் இது தலை வலியான சூழலாக மாறியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 11:29 [IST]
English summary
Tvs motor plans to invest inr 2000 crore in karnatak to expanding its capabilities
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+