20 லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை வாங்கிட்டாங்க! இதுல அப்படி என்னங்க இருக்குது?
டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரை 20 லட்சம் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதே போல இந்த ஸ்கூட்டர் 3 லட்சம் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் விற்பனை மற்றும் இதர விபரங்களை விரிவாகன காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு தனது முதல் என்டார்க் 125 ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மே மாதத்துடன் மொத்தம்20,06,038 வாகனங்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் முதல் 10 லட்சம் ஸ்கூட்டர் விற்பனை முதல் 4 ஆண்டுகளில் வந்துள்ளது. அடுத்த 10 லட்சம் ஸ்கூட்டர் விற்பனை அடுத்த 3 ஆண்டுகளில் வந்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் டிவிஎஸ் நிறுவனம் 87 லட்சம் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதில் இந்த ஸ்கூட்டர் மட்டும் 23 சதவீத விற்பனை பங்கை வைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 3,34,414 ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் 3,31,865 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது 6 சதவீதம் விற்பனை வளர்ச்சிடையந்துள்ளது.
கடந்த 2022ம் நிதியாண்டில் இந்த ஸ்கூட்டர் மொத்தம் செய்யப்பட்ட விற்பனையில் 29 சதவீத விற்பனை பங்கை பிடித்திருந்த நிலையில் தற்போது விற்பனை பங்கு கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம் இந்நிறுவனம் விற்பனை செய்யும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை பங்கும், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை பங்கும் அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் 125 சிசி இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் 5 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. டிஸ்க், ரேஸ் எடிசன், சூப்பர் ஸ்வாட் எடிசன், ரேஸ் எக்ஸ்பி மற்றும் எக்ஸ்டி ஆகிய எடிசன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள இன்ஜின் 10.2 பிஎச் பவரையும், 10.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள எக்ஸ்டி வேரியன்டில் மட்டும் டிஎஃப் டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மற்ற வேரியன்ட்களில் டிசிடி டிள்பிளே தான் வழங்கப்பட்டுள்ளது. அதே போல டிஸ்க், ரேஸ் எடிசனிற்கும், சூப்பர் ஸ்வாட் எடிசனிற்கும் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரை வெளியிடும் போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. வருங்காலங்களிலும் இந்த ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









