தேதிய குறிச்சிட்டாங்க! இந்தியாவே எதிர்பார்க்குற வண்டி இது தான்!
டிவிஎஸ் நிறுவனம் தனது பவர்ஃபுல்லான என்டார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 150 சிசி வெர்ஷனான என்டார்க் 150 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர் செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டருக்கான தேவையை அறிந்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் என் டார்க் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டருக்க மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தஸ்கூட்டர் 125 சிசி இன்ஜின் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் இதன் அடுத்த வெர்ஷனாக 150 சிசி யில் மேக்ஸி ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதன்படி இந்த ஸ்கூட்டர் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் வெளியீடு குறித்த டீசரையும் அந்நிறவனம் வெளியிறட்டுள்ளது. இதில் போல்டான டிசைன் மற்றும் ஷார்ப்பான லுக் கொண்ட குவாட் எல்இடி ஹெட்லைட் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த ஸ்கூட்டர் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் மக்கள் மத்தியில் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் பெருகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்து வெளியான டிசைன் அமைப்பின்டி குவாட் ஹெட்லைட் இருக்கிறது. இதில் T லேஅவுட் கொண்ட ஹைட்லைட் கிஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாலையில் செல்லும் போது கமெண்டிங்கான பிரசென்ஸ் கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் முழு வடிவமைப்பு வெளியாகாவிட்டாலும் இது பார்க்கம் போது ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இ்நத ஸ்கூட்டரில் 125 சிசி ஸ்கூட்டரில் உள்ள பெரும்பாலான டிசைன்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் அதை விட ஷாப்பாகவும் அக்ரஸிவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் சாலையில் செல்லும் போது மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இது இருக்கும் என எதிர்பர்க்கலாம்.
இந்த ஸ்கூட்டரின் ஸ்பெசிஃபிகேஷன் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி இதில் லிக்யூட் கூல்டு 150 சிசி இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 14 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் டிஎஃப்டி டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் இடம் பெற வாயப்ப்புள்ளது. இதில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் ஆப்ஷனில் உங்கள் ஸ்மார்ட் போனை இணைக்கும் ஆப்ஷனும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் போது ரூ1.50 லட்சத்திற்குள் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஏராக்ஸ் 15 மற்றும் எக்ஸ்ஸூம் 160 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவமன் போட்டியாளர்கள் தயாரிப்பை விட குறைந்த விலையில் இதை அறிமுகப்படுத்தி மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மேக்ஸி ஸ்கூட்டர் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்த செக்மெண்ட் பக்கம் நகர்வது தான். இந்த ஸ்கூட்டர் மீதான உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









