ரேட் இவ்வளவு கம்மியா? வீட்டுக்கு ஒருத்தராவது இந்த வண்டிய வாங்கிடுவாங்க போல!

டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 150 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 149.7 சிசி ஏர் கூல்டு இன்ஜின் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் வெறம் ரூ1.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது போட்டி தயாரிப்புகளை விட குறைவான விலையாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பவர்ஃபுல்லான புரொடெக்ஷன் ஸ்கூட்டரான என்டார்க் 150 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ1.19 லட்சம் என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போட்டி தயாரிப்புகளாகன யமஹா ஏராக்ஸ், மற்றும் ஹீரோ ஸூம் 160 ஆகிய ஸ்கூட்டர்களை விட ரூ30,000 குறைவாக இருக்கிறது.

TVS Ntorq 150

இந்த ஸ்கூட்டர் இரண்டு விதமானவேரியன்ட்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களிலும் பொதுவாக எல்இடி லைட்டிங், டிராக்ஷன் கண்ட்ரோல், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் 149.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏர்கூல்டு ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. இது ஓசி3 ஆயில் கூல்டு தொழிற்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த இன்ஜின் 13.2 பிஎஸ் பவரையும் 14.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்துவிடும் என்றும் அதிகபட்சமாக 104 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 5.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இது மொத்தம் 115 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் 100/80-12 மற்றும் பின்பக்கம் 110/80-12 என்ற அவில் டியூப் லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

TVS Ntorq 150

பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 220 மிமீ பின்பக்கம் 130 மிமீ அளவுகளில் முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்சன் சிஸ்டத்தைபொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஹைட்ராலிக் டேம்பிங் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் அளவுகளை பொருத்தவரை 1861 மிமீ நீளமும், 740 மிமீ அகலமும், 1120 மிமீ உயரமும் 1285 மீமீ வீல் பேஸூம் கொண்டுள்ளது. இதில் 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 765 மிமீ சீட் நீளம், 770 மிமீ சீட் உயரம், 22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி ஆகிய வழங்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டாண்ட்ர்டு மற்றும் டிஎஃப்டி ஆகிய இரண்டு வேரியன்டகள் உள்ளன. இரண்டு வேரியன்ட்களிலும் ஸ்டிரீட், மற்றும் ரேஸ் ஆகிய 2 விதமான ரைடு மோடுகள் உள்ளன. இது போக டிவிஎஸ் ஐகோ அசிஸ்ட், டிராக்ஷன்கண்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் பிரேக் லிவர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

TVS Ntorq 150

இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டியான மஃப்லர், ஏரோ டைனமிக் விங்லெட், கலர்டு அலாய் வீல்கள் ஆகியன இந்த காருக்கு அக்ரஸவான கேரக்டரை வழங்குகின்றன. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் கிராஃபைட் கான்செப்டிலிருந்து அதிகம் இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக முன்பக்கம் புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டிஆர்எல்,எல்இடி இன்டிகேட்டர்கள் எக்ஸ் கான்செப்டிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டது போல உள்ளது. இது போக இதில் ஸ்பிளிட் கிராப் ரெயில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில் லைட், ஹஸார்டு லைட், ஃபாலோ மீ ஹெட்லைட் ஃபங்சன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

இதில் 5 இன்ச் கொண்ட டிஎஃப்டி ஸ்கிரீன் வெர்ஷன் உள்ளது. இதை ஹேண்டில் செய்ய 4 வே நேவிகேஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளுது. இது அப்பாச்சி 310 சிரீஸ் பைக்கில் இருப்பது போல இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலில் ஹைபிரிட் டிஎஃப்டி, + எல்சிடி செட்டப் உள்ளது. இதில் எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் இ-சிம், கஸ்டம் விட்ஜெட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பூட் லேம்ப் ரியர், வென்ட், 3டி லோகா, ஸ்போர்ட்டி ஸ்டப்பி, டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ஸூம் ஸ்கூட்டரை பொருத்தவரை 156 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.6 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக வடிவமவைக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டர் 142 கிலோ எடை கொண்டது. இதுலிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் கொண்டதாக இருக்கிறது.

யமஹா ஏராக்ஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 155 சிசி லிக்யூட் கூல்டு, 4 ஸ்டோக் எஸ்ஓஎச்சி தொழிற்நுட்பம் கொண்ட இன்ஜினை கொண்டுள்ளது. இது 15 எச்பி பவர் மற்றும் 13.9 என்எம் டார்க் திறனைவெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎக்ஸ் ஸூம் 1260 ஸ்கூட்டர் ரூ1.48 லட்சம் என்ற விலையில் லும் யமஹா ஏராக்ஸ் கூ%ட்டர் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்கூட்டர் மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி டர்போ ப்ளூ, ரேஸிங் ரெட், நிட்ரோ கிரீன், ஸ்டெல்த் சில்வர் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பல்வேறு சிறம்பசம்சங்களுடன் வருகிறது. முக்கியமாக போட்டி தயாரிப்புகளுக்கு சவால் விடும் குறைந்த விலையில் வந்துள்ளதால் இதன் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2025, 7:43 [IST]
English summary
Tvs ntorq 150 launched india price rs 1 19 lakh
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X