இன்னும் 2 நாள்தான்! நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! கலக்கத்தில் பஜாஜ்
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், டிவிஎஸ் (TVS) நிறுவனமும் ஒன்றாகும்.
டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் டிவிஎஸ் எக்ஸ் (TVS X) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிதாக மேலும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி (August 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter) என்ற பெயரில் களமிறக்கப்படலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்பிட்டர் என்ற பெயரை டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டே இந்தியாவில் பதிவு செய்து வைத்துள்ளது. எனவே புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஆர்பிட்டர் என்ற பெயர் சூட்டப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக இதுதான் இனி டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக (Most Affordable TVS Electric Scooter) இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2.2 kWh வேரியண்ட் ஆகும்.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 1,07,608 ரூபாய் மட்டுமே என டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் டிவிஎஸ் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இதை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான ஆகஸ்ட் 28ம் தேதிதான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்துடன் போட்டியிட்டு வரும் பஜாஜ் (Bajaj), ஓலா (Ola) மற்றும் ஏத்தர் (Ather) ஆகிய நிறுவனங்களுக்கு எல்லாம் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் உயரமான விண்டுஸ்க்ரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கிடைமட்டமான எல்இடி பகல் நேர விளக்குகளும், அதனுடனே ஒருங்கிணைந்த வகையிலான டர்ன் இன்டிகேட்டர்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும் பின் பகுதியில் ஸ்பிளிட் க்ராப் ரெயில்கள் மற்றும் முன் பகுதியில் தட்டையான ஃப்ளோர் போர்டு ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதன் தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் மேலும் வலிமையாக மாறி கொள்ள புதிய ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உதவி செய்யலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. மிகவும் குறைவான விலையில் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications








