கார்களையே தண்ணி குடிக்க வைக்கும் புது ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா! ஓலா, பஜாஜ் கதை முடிஞ்சுதுனு வெச்சுக்கங்க

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதில், டிவிஎஸ் (TVS) நிறுவனமும் ஒன்றாகும்.

டிவிஎஸ் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. அவை டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் டிவிஎஸ் எக்ஸ் (TVS X) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று (ஆகஸ்ட் 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

TVS Orbiter

இதன்படி டிவிஎஸ் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சற்று நேரத்திற்கு முன்பு இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம்தான்.

அதாவது டிவிஎஸ் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆர்பிட்டர் என்ற பெயரில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி டிவிஎஸ் ஆர்பிட்டர் என்ற பெயரிலேயே, இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TVS Orbiter Teaser

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.1 kWh பேட்டரி ஆப்ஷன் (Battery Option) வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 158 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 158 கிலோ மீட்டர்கள் என்பது சிறப்பான ரைடிங் ரேஞ்ச் (Riding Range) ஆக கருதப்படுகிறது.

ஆனால் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கார்கள் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் பைக்குகளில் இருப்பதை போன்ற க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு ஃபங்ஷன் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட் போன்ற ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் யூஎஸ்பி சார்ஜிங், ஓடிஏ அப்டேட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் போன்ற வசதிகளையும் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இவை எல்லாம் தவிர, ஜியோ ஃபென்சிங் மற்றும் டைம் ஃபென்சிங் போன்ற கனெக்டட் தொழில்நுட்ப வசதிகளும் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் 14 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு உதவும். அத்துடன் 'க்ரிப்' நன்றாக இருக்கும். அதே சமயம் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 34 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு 2 ஹெல்மெட்களை தாராளமாக வைத்து கொள்ளலாம். இது ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் அரிதான ஒரு விஷயம் ஆகும். இது போன்ற ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் 99,900 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 169 மிமீ ஆக இருக்கிறது. நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராட்டோஸ் ப்ளூ, லூனார் க்ரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்டைன் காப்பர் என மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் டெலிவரி (Delivery) பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஓலா (Ola), ஏத்தர் (Ather) மற்றும் பஜாஜ் (Bajaj) நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, டிவிஎஸ் ஆர்பிட்டர் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிசைன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ரைடிங் ரேஞ்ச் என அனைத்து அம்சங்களிலும், டிவிஎஸ் ஆர்பிட்டர் கவனம் ஈர்க்கிறது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 13:59 [IST]
English summary
Tvs orbiter electric scooter launched in india price range features colour options bookings delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+