இந்த 5 விஷயம் தெரியாம இந்த வண்டியை புக் பண்ணிடாதீங்க!

டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஆர்பிட்டர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் ஸஅகூட்டர் ஆகும். ஏற்கனவே ஐக்யூப் மற்றும் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வரும் நிலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இது என்ட்ரி லெவல் ஸ்கூட்டராக அறிமுகமாகியள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த டாப் 5 தகவல்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் ஆர்பிட்டர் விலை, வேரியன்ட் மற்றும் புக்கிங்

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ99,900 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொகை ரூ5001 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை திரும்ப பெறத்தக்கது. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி தீபாவளிக்கு பிறகு நவம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

TVS Orbiter

டிவிஎஸ் ஆர்பிட்டர் கலர்கள்

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் நியான் சன்பர்ஸ்ட், ஸ்டார்டோஸ் ப்ளூ, லுனார் கிரே, ஸ்டாலெர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம், மார்டின் காப்பர், உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

டிசைன்

இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு இந்தியாவின் சிறந்த ஏரோ டைனமிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என இதற்கு பெயரை பெற்று தந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் மினிமலான டிசைன் தான் உள்ளது. முன்பக்கமும், பின்பக்க உள்ள எல்இடி லைட்டுகள் இந்த டிசைனிற்கு பெருமை சேர்க்கிறது.

TVS Orbiter

அம்சங்கள்

இந்த ஸஅகூட்டரில் எல்இடி ஹெட்லைட், முன்பக்கம் சிறிய விண்ட் ஸ்கிரீன், 14 இன்ச் அலாய் வீல்கள், 290 மிமீ நீளமான ஃபூட்போர்டு, 845 மிமீ நீள சிங்கிள் பீஸ் ஃபிளாட் ஃபோர்ம் சீட், சீட்டிற்கு கீழே 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, இந்த ஸ்கூட்டரில் எக்கோ மற்றும் பவர் ஆகிய இரண்டு விதமான ரைடு மோடுகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், யூஎஸ்பி சார்ஜி்ங ஸ்லாட், ரிவர்ஸ் மோடு அகிய அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்கூட்டர் ரூ1 லட்சத்திற்குள் குறைவான விலையில் விற்பனைக்க வருவதால் இதில் கலர் எல்சிடி டிஎஸ்பிளே மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் கனெக்டிவிட்டி வசதியில் கால் அம்சம் இடம்பெறும். இந்த ஸ்கூட்டரின் கனெக்டிவிட்டிற்காக ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் அம்சம் இருக்கிறது. இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், லைவ் லோகேஷன், ஜியோ ஃபென்சிங், ஃபால் டிரெட்கஷன், தெஃப்ட் டிடெக்ஷன்,ஓடிஏ அப்டேட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் ரேஞச்சை பொருத்தவரை இதில் 3.1 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 158 கீ.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரிலும் இதே 3.1 kWh பேட்டரி பேக் உள்ளது. ஆனால் அதில் 123 கி.மீ ரேஞ்ச் தான் கிடைக்கிறது. 3.5kWh பேட்டரி பேக் கொண்ட ஐக்யூப் ஸ்கூட்டர் 145 கி.மீ தான் தருகிறது. ஆனால் இந்த ஸ்கூட்டர் மிக அதிகமாக ரேஞ்ச் தருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது இதனால் இதன் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரை வாங்க ஏகப்பட்ட போட்டி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, September 1, 2025, 7:42 [IST]
English summary
Tvs orbiter electric scooter top things to know
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+