அடிமாட்டு ரேட்டுக்கு அறிமுகமாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! அதுவும் தமிழ்நாட்டுலேயே தயாராகுது!

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் ஆர்பிட்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 28ம் தேதி அறிமுகமாகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி வருகின்றனர். இந்த ஸ்கூட்டர்கள் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஐக்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. தற்போது புதியதாக என்ட்ரி லெவலில் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்க தயாராகி வருகிறது. வெறும் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஐக்யூப் ஸ்கூட்டரை விட குறைவான விலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகிறது.

TVS Orbiter Launch

இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ஓலா எஸ்1 எக்ஸ் மற்றும் விடா விஎக்ஸ்2, பஜாஜ் சேத்தக் பேஸ் வேரியன்ட்களுக்க போட்டியாக களம் இறங்குகிறது. இந்த டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 2kWhபேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். குறிப்பாக டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த ஸ்கூட்டர் சிறந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஸ்கூட்டரில் சிம்பிளான டிஜிட்டல் கன்சோல், எல்இடி லைட்டிங், பேசிக்கான ரைடு மோடுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஆகியவை இருக்கும். விலை குறைவாக இருப்பதால் கனெக்டிவிட்டி அம்சம் இதில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Orbiter Launch

இந்த டிசைன் கிளீன் மற்றும் பிராக்டிக்கல் அம்சங்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான அம்சத்துடன் இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த வாகனம் பார்ப்பதற்கும் நல்ல லுக் உடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் காப்புரிமை புகைப்படங்கள் கூட வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டரைடிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறைவான பட்ஜெட்டில் இவி வாகனத்தை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்காக இந்த வாகனத்தை நம்பி வாங்கும் அளவிற்கு நம்பக தன்மையுடன் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படுகிறது.

TVS Orbiter Launch

இந்த ஸ்கூட்டர் விலை குறைவாக இருப்பதால் விற்பனை அமோகமாக இருக்கும். டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனவையில் ஒரு புரட்சியை செய்து வருகிறதோ அதே போல இந்த ஸ்கூட்டரும் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனவையில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளரந்து வந்தது. ஆனால் படிப்படியாக அந்நிறுவனத்தின் விற்பனை சரிவை சந்தித்து வருகின்றனர். அதே நேரத்தி்ல் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய ஸ்கூ்டடர்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மார்கெட் பங்கை அந்நிறுவனம் வெறும்.

தீபாவளி பண்டிகை வேறு நெருங்குவதால் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தை குறி வைத்து இந்த ஸ்கூட்டர் களம் இறங்குகிறது. இதன் புக்கிங் மற்றம் டெலிவரி குறித்த தகவல்கள் எல்லாம் இந்த பைக்கின் அறிமுகத்தின் போது தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பேட்டரி வழங்கப்படுகிறதா என்ற விபரமும் தெரியவில்லை. ்அப்படி வழங்கப்பட்டால் இதன் விலை மேலும் கணிசமாக குறையும். இதனால் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் இது வாகன விற்பனையிலும் சிறப்பான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை மேண்டில் சொல்லுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகும் அறிமுகத்திற்கு பிறகு தான் இதன் அதிகாரப்பூர்வமான விலை விபரங்கள் தெரிய வரும். இந்த வாகனத்தின் விலை எதிர்பார்ப்பதை விட குறைவாக இருந்தால் நிச்சயம் ஓலா, பஜாஜ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அடி விழும்

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 7:00 [IST]
English summary
Tvs orbiter launch what to expect full details
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X