கம்மி விலையில இத்தனை வண்டியா? ஒன்னுக்கு ஒன்னு செம போட்டியா இருக்குதே!
இந்திய எலெக்ட்ரிக் மார்கெட்டில் டிவிஎஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஆர்பிட்டர் என்ற ஸ்கூட்டரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் வெறும் ரூ99,900 என்ற விலையில் தான் அறிமுகமாகியுள்ளது. மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் பல்வேறு வாகனங்களுக்க போட்டியாக விற்பனையாகி வருகிறது. இங்கே நாம் டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரை அதை போட்டி தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம்.
இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் விற்பனையாகும் ஏத்தர் ரிஸ்டா, விடா விஎக்ஸ் 2 மற்றும் ஓலா எஸ்1எக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த விலையில் மாஸ் மார்கெட்டை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள சிறந்த அம்சங்கள் மற்றம் அதன் சிறப்புகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

விலை ஒப்பீடு
டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டர் விலை விஷயத்தில் பெரும்பாலான வாகனங்களை பின்னுக்க தள்ளிவிட்டது. இந்த ஸ்கூட்டர் ரூ99,900 என்ற விலையில் விற்பீனைக்க வந்துள்ளது. இதற்கு போட்டியாக விற்பனையாகும் ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் ரூ1.08 முதல் ரூ1.77 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த நிறுவனம் விலையை விட பிரிமியம் விஷயும் முக்கியம் என கருதியதால் இந்த விலைக்க விற்பனை செய்கிறது.
ஹீரோ விடா வி2எக்ஸ் ஸ்கூட்டர் ரூ97,800க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ஆர்பிட்டர் விலை தான். விடா வி2எக்ஸ் இளைஞர்களையும் நகர்புறங்களில் வசிப்பவர்களை ஈர்கும் விதமான வடிவமைப்பில் உள்ளது. ஓலா எஸ்1எக்ஸ் ஸ்கூட்டரும் குறைவான விலை தான் ரூ79,999 முதல் ரூ99,999 என்ற விலையில் விற்பனையாகிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் கிட்டத்தட்ட போட்டி தயாரிப்புகளின் விலை தான் என்பதால் விலையில் நல்ல போட்டி இருக்கிறது.

அம்சங்கள்
டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 3.1kWh பேட்டரி பேக் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 158 கி.மீ ரேஞ்ச் தரும் வகையில் உரவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நீண்ட தூரம் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல ஸ்கூட்டராக இரகு்கும். இதி்ல செக்மெண்டிலேயே முதன் முறையாக 14 இன்ச் முன்பக்க வீல், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் அசிஸ்ட், 169 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 34 லிட்ட பூர் வசதி, 845 மிமீ ஃபிளாட் சீட், ஃப்ளூடூத் மூலம் இயங்கும் டிஸ்பிளே, டர்ன் பை டர்ன் இன்டகரேஷன், ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் ஆப் ஆகிய அம்சங்கள் உள்ளது.
ஏத்தர் ரிஸ்டாவில் 2.9kWh முதல் 3.7kWh வரையிலான பேட்டரி பேக் இருக்கிறது. இது 105-125 கி.மீ மைலேஜை வழங்குகிறது. ஹீரோ விடா வி2எக்ஸ் ஸ்கூட்டரில் 3.44kWh பேட்டரி பேக் உள்ளது. இது 110 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இதில் ரிமூவபிள் பேட்டரி, மல்டிபிள் ரைடிங் மோடுகள், வேகமான சார்ஜிங் அம்சங்கள், இளைஞர்களை ஈர்க்கும் அம்சங்கள் இதில் பல இருக்கிறது.

வி2எக்ஸ் கூட்டர் ஏத்தர் அளவிற்கு தொழிற்நுட்பம் அதிகமாக இல்லை. அதே நேரம் விலையும் ஆர்பிட்டர் அளவிற்க தான் உள்ளது. ஆனால் இதில் புதிய டிசைன் மற்றும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் தனித்துவமாக உள்ளது. ஓலா எஸ்1எக்ஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 2kWh முதல் 3kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இது 95-151 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அம்சங்களில் இந்த ஸ்கூட்டர் சற்று குறைவாக தான் உள்ளது. ஓலா நிறுவனம் சில்லறை விற்பனையில் அதிகமாக விற்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த வாகனத்தை தயாரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த வாகனம் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர்களில் உங்களுக்கு பிடித்த ஸ்கூட்டரை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









