பாக்க ஸ்போர்ட்ஸ் பைக் லுக்ல இருக்கு! விலை இவ்ளோ குறைய போகுதா! ஷோரூம்ல இப்பவே ஒன்னு சொல்லி வைக்கணும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125). கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், டிவிஎஸ் ரைடர் 125 பைக் இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 4 வருடங்கள் மட்டுமே ஆகிறது.

ஆனால் அதற்குள்ளாகவே 1.6 மில்லியன் டிவிஎஸ் ரைடர் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. அதாவது 16 லட்சம் பைக்குகள். இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், 16,04,355 டிவிஎஸ் ரைடர் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 2.45 லட்சம் பைக்குகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

TVS Raider 125

எஞ்சிய அனைத்து பைக்குகளும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை. இவை அனைத்தும் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி வரையிலான விற்பனை நிலவரம் ஆகும். என்டிடிவி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் தற்போதைய நிலையில் மொத்தம் 6 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 87,625 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 1,02,915 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் தற்போதைய நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

TVS Raider 125 Fuel Tank

ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ள வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பின்னர், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விலை வெகுவாக குறையவுள்ளது. பைக்தேக்கோ தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 80,873 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.

அதே நேரத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் டாப் வேரியண்ட்டின் புதிய விலை 94,830 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இது 125 சிசி பைக்காக இருந்தாலும், பார்ப்பதற்கு ஸ்போர்ட் பைக் போல், கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப் போன்ற அம்சங்களும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 180 மிமீ ஆக உள்ளது. இந்திய சந்தையலில் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125) மற்றும் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour Xtec) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ரைடர் 125 திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்டைலான டிசைன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், சௌகரியமான ரைடிங் பொஷிஷன் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய அம்சங்கள் ஒருங்கிணைந்து, டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை, மிகச்சிறந்த தயாரிப்பாக மாற்றியுள்ளன. இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, இதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர்.

தினமும் அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவோருக்கு, டிவிஎஸ் ரைடர் 125 பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. நகர பயன்பாடுகள் மட்டுமல்லாது, அவ்வப்போது இதில் தொலை தூர பயணங்களையும் மேற்கொள்ள முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 14:00 [IST]
English summary
Tvs raider 125 achieves 1 6 million unit sales milestone check all details here
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+