பாத்தா எதோ ரொம்ப விலை அதிகமான ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு! ஆனா உண்மையான ரேட் இவ்ளோதானா! டிவிஎஸ் தயாரிப்பு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125). வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக்குகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு சரியாக அமையவில்லை.
ஆம், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 51,098 டிவிஎஸ் ரைடர் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 43,028 ஆக குறைந்துள்ளது. அதாவது 8,070 டிவிஎஸ் ரைடர் 125 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

இது 15.79 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers), டிவிஎஸ் ரைடர் 125 பைக் 8வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) ஆகும்.
இதற்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரும், 3வது இடத்தில் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்கும், 4வது இடத்தில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்கும், 5வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டரும் உள்ளன.

6வது இடத்தில் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டரும், 7வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) பைக்கும் உள்ளன. இந்த வரிசையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக் 8வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் வரும் மாதங்களில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கலாம்.
இது இந்தியாவின் 125 சிசி பைக் செக்மெண்ட்டில் விற்பனை செய்யப்படும் தனித்துவமான ஒரு தயாரிப்பு ஆகும். இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில்தான் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைத்து கொள்வதற்கான இடவசதி வழங்கப்படுகிறது. அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வசதியையும் (Feature) டிவிஎஸ் ரைடர் 125 கொண்டுள்ளது.
இளைஞர்களை கவரும் துள்ளலான டிசைன், அதிநவீன வசதிகள், நம்பகத்தன்மை வாய்ந்த செயல்திறன் உள்ளிட்ட காரணங்களால், டிவிஎஸ் ரைடர் 125 பைக் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 124.8 சிசி இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 90,548 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1,05,148 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour XTEC), ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125) மற்றும் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125) ஆகிய பைக்குகளுக்கும் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ரைடர் 125 திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








