பாக்க காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு! ஆனா விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 27,481 ரைடர் 125 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 29,850 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை 7.94 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் டிவிஎஸ் ரைடர் 125 பைக் கூடிய விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் 7.94 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes June 2025), டிவிஎஸ் ரைடர் 125 பைக், 7வது இடத்தை பிடித்துள்ளது.
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் செயல்திறனை பொறுத்தவரையில், 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 87,010 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1,02,300 ரூபாயாக இருக்கிறது. இவை டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், 85க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகள் உடன் எல்சிடி டிஜிட்டல் டிஸ்ப்ளே, சௌகரியமான பயணத்திற்காக மோனோ-ஷாக் சஸ்பென்ஸன், எல்இடி ஹெட்லேம்ப், முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க் என ஏகப்பட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர கூடிய வகையில் உள்ளன.
அத்துடன் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ரைடிங் பொஷிஷன், சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கிறது. இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125) மற்றும் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour Xtec) போன்ற பைக்குகள் உடன், டிவிஎஸ் ரைடர் 125 போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தில் டிவிஎஸ் ரைடர் 125 டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏராளமான வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவர கூடிய விஷயமாக உள்ளன. எனவே தற்போது ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








