பீச்க்கு பேர் போன ஊர் பெயரில் ஒரு வண்டியா? அதுவும்இந்த கம்பெனி விட்டிருக்குதா?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ரோனின் பைக்கில் அகோடா என்ற வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளுது. இந்த பைக் ரூ1.31 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.இந்த பைக்கின் சாதாரண வேரயின்ட்கள் ரூ1.26 லட்சம் முதல் ரூ1.28 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த பைக்கின் தனத்துவமான அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் கோவாவில் மோட்டோசோல் 2025 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனம் தனது ரோனின் பைக்கின் அகோடா வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை செய்துள்ளது. இந்த அகோன்டா என் வேரயன்ட் கோவாவில் உள்ள அகோன்டா கடற்கறையை இன்ஸ்பயர் செய்து உரவாக்கப்பட்டுள்ளது. அமைதியாக சத்தம் இல்லாமல் ரியலாக்ஸாக மணல் லேண்ட் ஸ்கேப் ஆகிய அம்சங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வடக்கு கோவா பகதி அதிக கூட்ட நெரிசல் உடன் சத்தமாக இருக்கும். ஆனால் அதற்கு நேர் மாறாக அகோன்டா பீச் இருப்பதால் அதை இன்ஸ்பிரிரேஸானக எடுத்துள்ளுது. இந்த அகோண்டா வேரியன்ட் பைக்கில் கிளாஸி ஒய்ட் நிற பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளுது. ஹெட்லைட்டிலும் இந்த ஷேடு இருக்கிறது. இது கருப்பு நிற பேக்கிரவுண்டிற்கு கான்ராஸ்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக யூஎஸ்டி ஃபோர்க், அலாய் வீல்கள், சம்ப் கார்டு, இன்ஜின் அசெம்பிளி, ஹேண்டில் பார், எக்ஸாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
டேங்க் மேல் பகுதியில் அகோண்டா என்ற எழுத்துபெரியதாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் டேங்கிற்கு அழகு சேர்க்க சிவப்பு மற்றும் நீல நிற கோடுகள் உள்ளன. நிது நீள வாக்கில் வழங்கப்ப்டடுள்ளது.வெள்ளை நிற கலர் மாஸ் மார்கெட்டிற்கு ஏற்ற நிறம் இல்லைஎன்றாலும் சிலர் மினிமலான டிசைன் உடன் தனித்துவமான வாகனத்தை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

விஷூவல் மாற்றம் போக வேறு எந்த மாற்றமும் இந்த பைக்கில் செய்யப்படவில்லை. ரூ1.31 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளுது. இந்த பைக்கில் 225.9 சிசி சிங்கிள் சிலிண்டர் , 4 ஸ்டோக், 4 வால்வு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. எஸ்ஓஎச்சி இன்ஜின் ஆகும். இது 20.4 பிஎஸ் பவரையும், 19.93 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் டபுள் கார்டில் ஸ்பிளிட் ஸிங்கிரோ ஸ்டிஃப் பிரேம் வழங்கப்பட்டுள்ளுது. மேலும் இதில் முன்பக்கம் 41 மிமி யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் ரைடருக்கு நல்ல அனுபவத்தை வழங்கும்.
மேலும் டிவிஎஸ் ரோனின் வட்ட வடிவிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இதில் ஜிடிடி லோரைடு டிராஃபிக், ஐஎஸ்ஜி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் அசிஸ்ட் கால்கள், எஸ்எம்எஸ் அலர்ட்கள், சைடு சாண்ட் இன்டிகேட்டர், கனெக்டெட் அம்சங்கள் உள்ளன. இதில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் ரோனின்பைக் ஒரளவிற்கு நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த புதிய வேரியன்ட் நிச்சயம் பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். கோவா மக்களுக்கு இந்த பைக் ஒரு பெருமையை பெற்று தந்துள்ளது.


Click it and Unblock the Notifications








