ரூ14,300 விலை குறைகிறது! டிவிஎஸ் ஷோரூம்ல நாளை கூட்டம் கூடப்போகுது!

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் நாளை அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி மாற்றத்தால் ஏற்படும் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்க வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாளை மூலம் டிவிஎஸ்ர ரோனின் பைக்கின் விலை ரூ14,300 வரை குறைகிறது. இதன்படி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான விபரங்களை இங்கே காணலாம்.

இந்தியாவில் நாளை முதல் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வருகிறது. இதன்படி 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்கள் இனி 18 சதவீத வரிவிதிப்பிலும், 350 சிசிக்கு அதிக இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 40 சதவீத வரி விதிப்பிலும் வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுகு்கு வழங்க முடிவு செய்துள்ளது.

TVS Ronin

இதன்படி டிவிஎஸ் ரோனின் பைக் என்ட்ரி லெவல் வேரியன்ட் லைட்டனிங் பிளாக் வேரியன்ட் ரூ1,35,990 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி இந்த பைக் ரூ1,24,790 என்ற விலையில் விற்பனையாகும். இந்த பைக் ரூ11,200 வரை விலை குறைகிறது. மேக்னா ரெட் வேரியன்ட் இதுவரை ரூ1,38,520 என்ற விலையில் விற்பனவையாகி வந்தது. இனி ரூ1,27,090 என்ற விலையில் விற்பனைக்கு வரும் இந்த வேரியன்ட் ரூ 11,430 விலை குறைகிறது.

மிட் வேரியன்டை பொருத்தவரை கிளாஸியர் சில்வர் வெர்ஷன் ரூ 1,60,510 என்ற விலையில் விற்பவனையாகி வந்தது. இனி ரூ 1,47,290, என்ற விலையில் விற்பனையாகும். இது ரூ 13,220 விலை குறைகிறது. சார்கோல் எம்பர் வெர்ஷ் வாகனம் ரூ1,62,010 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இனி ரூ1,48,590 என்ற விலையில் விற்பனையாகும். இந்த வாகனம் ரூ13,420 வரை விலை குறைகிறது.

TVS Ronin

டாப் வேரியன்ட்டில் நிம்பஸ் கிரே வேரியன்ட் ரூ1,73,720 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி ரூ1,59,390 என்ற விலையில் விற்பனையாகும். இந்த வாகனம்ரூ14330 வரை விலை குறைகிறது. மிட்நைட் ப்ளூ வெர்ஷன் அதே ரூ 1,73,720 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி ரூ 1,59,390 என்ற விலையில் விற்பனையாகும். இந்த வாகனம் ரூ 14330 வரை விலை குறைகிறது.

டிவிஎஸ் ரோனின் பைக்கில் 225.9 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.4 பிஎஸ் பவரையும், 19.93 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தினசரி பயன்பாடு அவ்வப்போ ஹைவே டிரப், ஆகிய பயன்பாட்டிற்கு ஏற்றது.

TVS Ronin

இதில் முன்பக்கம் யூஎஸ்டி ஃபோர்க்குகள், எல்இடி லைட்டிங், கனெக்டிவிட்டி அம்சம், இதில் முன்பக்கம் 300 மிமீ, பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக் இருக்கிறது. இதில் 14 லிட்டர் ஃப்யூயல் டேங்க், 159 கிலோ எடை மற்றும் 181மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வாகனங்களின் விலையை கணிசமாக குறைத்துள்ள நிலையில் தற்போது இந்த வாகன விலை குறைந்துள்ளது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். நாளை முதல் இந்த வாகனத்தின் விற்பனை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 21, 2025, 11:02 [IST]
English summary
Tvs ronin price cut rs 14300 gst 2 benefits
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X