டிவிஎஸ் ஸ்டாலில் நிறுத்தப்பட்டிருந்த விநோத உருவம் கொண்ட பைக்.. சுத்தி சுத்தி வந்து பார்த்த கூட்டம்!!

வாகன ஆர்வலர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Global Mobility Expo 2025) இன்று (ஜனவரி 17) இந்தியாவில் தொடங்கியது. இந்த உலக மேடையை பயன்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், டிவிஎஸ் (TVS) நிறுவனமும் இந்த வாகன கண்காட்சியில் பங்கு பெற்று தன்னுடைய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.

நிறுவனத்திற்கு என ஒதுக்கப்பட்டு இருந்த ஸ்டாலில் வழக்கமான கூட்டத்தைவிட சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்டிஎஸ்எக்ஸ் சூப்பர்மோட்டோ (RTSx Supermoto) பைக் மாடலே ஆகும். இது ஓர் கான்செப்ட் பைக் (Concept Bike) மாடல் ஆகும்.

Tvs rtsx supermoto concept

இதை பார்க்கவே பலர் அங்கு குவிந்தனர். டிவிஎஸ் இந்த கான்செப்ட் மாடலை மட்டுமல்ல இன்னும் பல்வேறு புதுமுக மற்றும் கான்செப்ட் மாடல்களைக் காட்சிப்படுத்தியது. இந்த பதிவில் நாம் ஆர்டிஎஸ்-எக்ஸ் சூப்பர்மோட்டோ கான்செப்ட் மாடலைப் பற்றிய முக்கியமான மற்றும் சுவாரஷ்யமான தகவல்களையேப் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெயருக்கு ஏற்ப தனித்துவமான தோற்றத்தை இந்த பைக் கொண்டிருக்கின்றது. டர்ட் பைக் (Dirtbike) வகையை போலவே அது காட்சியளிக்கின்றது. ஆனால், டர்ட் வகை பைக்குகள் மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் இருக்கும். ஆனால், டிவிஎஸ் ஆர்டிஎஸ்-எக்ஸ் சூப்பர் மோட்டோ பைக்கோ அதிக கவர்ச்சியான லுக்கைக் கொண்டதாக இருக்கின்றது.

Tvs rtsx supermoto concept engine

மேலும், இதில் இருக்கை என்பதை டிவிஎஸ் வழங்கி இருக்கின்றதா இல்லையா என சந்தேகிக்கும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. காற்றையும், கரடு-முரடான பாதையையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் கூரிய அமைப்பு மற்றும் உயரமான உருவத்தை இதற்கு டிவிஎஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

தொடர்ந்து, இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சினும் புத்தம் புதியது ஆகும். ஆர்டி-எக்ஸ்டி4 எஞ்சினையே அது பயன்படுத்தி இருக்கின்றது. இது ஓர் 299 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சின்ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 35 பிஎஸ் மற்றும் 28.5 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கான்செப்ட் மாடலில் சிறந்த இயக்க அனுபவத்திற்காக இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 300 மிமீ பெடல் டிஸ்க்கும், பின் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முற்றிலும் மாறுபட்ட லுக்கைக் கொண்டிருந்த காரணத்தினால் டிவிஎஸ்-க்கு ஒதுக்கப்பட்டு இருந்த ஸ்டாலில் சற்றே பார்வையாளர்களின் கூட்டம் அதிகமாக தென்பட்டது. இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், சீக்கிரமே இதன் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 21:53 [IST]
English summary
Tvs rtsx supermoto concept showcases with new rt xd4 engine at bharat global mobility expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+