கேடிஎம் எல்லாம் ஓரம்போ! தமிழ்நாட்டு கம்பெனி வெளியிட்ட தரமான பைக்! விலையும் ரொம்ப கம்மி!
டிவிஎஸ் நிறுவனம் 300 சிசி அட்வெஞ்சர் பைக் செக்மெண்டில் இன்று வெற்றிகரமாக தனது காலடி தடத்தை பதித்து வைத்துள்ளது. இந்நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கை இன்று அறிமுகப்படுத்தியள்ளது. இந்தியாவில் மிக வேகமாக இந்த செக்மெண்ட் வளர்ந்து வருவதால் அதில் தனது காலடி தடத்தை இந்நிறுவனம் பதித்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் தனது புரோட்டோ டைப்பை காட்சிப்படுத்தியது. இந்த பைக் தற்போது சாலையில் பயணிக்க ஏற்ற பைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 299 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 35 எச்பி பவரையும், 28.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.இதில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அனவைத்து விதமான சாலைகளிலும் இதை பயன்படுத்த முடியும். இந்தபைக்கின் வடிவமைப்பை பொருத்தவரை அனைத்து அட்வெஞ்சர் பைக்கின் வடிவமைப்பு எப்படி இருக்கிறதோ அதன்படியே இந்த பைக்கின் வடிவமைப்பும் இருக்கிறது. இந்த பைக்கில் பெரிய விண்ட் ஸ்கிரீன் செட்டப் உள்ளது.
இது போக ஷார்ப்பான முன்பக்க வடிவமைப்பு பேக் ஸ்டைல் ஃபென்டர் வடிவமைப்பு, ஸ்பிலிட் சீட் லேஅவுட், ஸ்டீல் டெரில்ஸ் ஃபிரேம், தலை கீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க், பின்பக்க மோனோ ஷாக் சன்ஸ்பென்சன் சொகுசான ஸ்டெபிளான ரைடு வழங்கும் அனைத்து வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முன்பக்கம் 19 இன்ச் அளவிலும் பின்பக்கம் 17 இன்ச் அளவிலும் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள டயர்கள் என்பது ஹைவே மற்றும் ஆஃப்ரோடு இரண்டு பயன்பாட்டிலும் சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை வரை முழு கலர் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சம் இருக்கிறது. இதில் டர்ன்-பை -டர்ன் நேவிகேஷன் வசதி இருக்கிறது. இதில் உங்கள் ஸ்மார்ட் போன்களை இணைகத்துக்கொள்ள முடியும். மேலும் இதில் டுயல் கிளட்ச் ஏபிஎஸ், மல்டிபிள் ரைடு மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்விட்சபிள் ஏபிஎஸ், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பைக் ஒரு சிறப்பான அட்வெஞ்சர் ரைடிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. பைப்பர் கிரீன், லைட்டனிங் பிளாக், மெட்டாலிக் ப்ளூ, பியர்ல் ஒயிட் ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது.

இந்த பைக் அறிமுக விலையாக ரூ1.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இது பேஸ் வேரியன்ட் விலை தான். இதன் டாப் வேரியன்ட் ரூ2.14 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், பிடிஓ வேரியன்ட் ரூ2.29 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மார்கெட்டில் உள்ள கேடிஎம் 250 அட்வெஞ்சர் மற்றும் யெஸ்டி அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 300 சிசி அட்வெஞ்சர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் பல்ர இந்த செக்மெண்ட் பைக்குகளை விரும்புகின்றனர். இந்நிலையில் இந்த பைக்குகள் சிறப்பாக விற்பனையாகும் என்பதால் இந்த பைக் களம் இறங்கியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









