5 லட்சம் பேர் ஒரே மாசத்துல இந்த தமிழ்நாட்டு கம்பெனியை நம்பி வண்டி வாங்கியிருக்காங்க!
டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனைசெய்துள்ளது. இந்நிறுவனம் 5 லட்சம் என்ற மைல் கல்லை கடப்பது இது தான் முதல் முறை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் டூவீலர்களை தயாித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஓசூரில் தனது ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து வரகிறது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்கைள வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5,09,536 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது கடந்தாண்டு இதே காலகடட்டத்தில் நடந்த விற்பனவையை ஒப்பிடும் போது 30 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 3,78,841 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது இது 5 லட்சம் என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்வது இது தான் முதன் முறை.
இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனையில் உள்நாட்டில் மட்டும் 3,68,862 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 2,89,073 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தற்போது 28 சதவீதம் உள்நாட்டு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை சேர்ந்து அதிகரித்துள்ளது.

பைக் விற்பனையை பொருத்தவரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1,70,486 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது இது 2.21,870 என இந்த எண்ணிக்கை அதிகரித்து 30 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவே ஸ்கூட்டர் விற்பனையில் கடந்தாண்டு மொத்தம் 1,63,629 வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில் இந்தாண்டு வெறும் 2,22,296 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 36 சதவீதம் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெறஅறுள்ளது. இந்நிறுவனம மொத்தம் 99,976 வாகனங்களை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்திருந்தது. இது தற்போது 1,35367 ஆக எண்ணிக்கை அதிரித்து ஏற்றுமதியில் மட்டும் 35 சதவீத வளர்ச்சியை பெற்றள்ளது. இதில் டூவீலர் மட்டும் கணக்கு பார்த்தால் கடந்தாண்டு 89768 வாகனங்கள் ஏற்றுமதியான நிலையில் தற்போது 1,21,926 வாகனங்கள் ஏற்றுமதியாகியள்ளது.

3 வீலர் செக்மெண்டில் கடந்தாண்டு 12747 வாகனங்கள் விற்பனவையாகியிருந்த நிலையில் இந்தாண்டு 18748 வாகனங்கள் விற்பனையாகி விற்பனை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. பல்வேறு வாகன செக்டாரிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் இந்நிறுவனம் இந்திய அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு இந்நிறுவனத்தின் யுக்தி மற்றும் சிறப்பான தயாரிப்புகள் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது.
இது மட்டுல்ல டிவிஎஸ் நிறுவனம் தான் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்குகளை தயாரிக்கிறது. சர்வதேச அளவில் உள்ள ஒரு நிறுவனம் தன் டூவீலர் தயாரிப்பிற்காக தமிழகத்ததை சேர்ந்த நிறுவனத்தை நம்பியுள்ளது. இந்நிறுவனம் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் விற்பனை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையிலும் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









