தமிழ்நாட்டு நிறுவனம் 91 நாளில் 12 லட்சம் வண்டிகளை வித்திருக்காங்க!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 91 நாளில் 12.77 லட்சம் வாகனங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் இதன் மூலம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனைய விட 17 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜூலை மாதம் துவங்கிய நிலையில் கடந்த முதல் காலாண்டிற்கான விற்பனை விபரங்களை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 3 மாதத்தில் மொத்தம் 12.77 லட்சம் டூவீலர் மற்றும் 3 வீலர்கள் வாகனங்களை தயாரித்துள்ளது. கடந்த 2025ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 10.87 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில் 17 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

TVS Sales Q1 2025

கடந்த 3 மாதங்களில் 0.45 லட்சம் 3வீலர்கள் விற்பனையாகியுள்ளது. இந்த செக்மெண்டில் மட்டும் கடந்த 2024ம் நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனையை விட 46 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அப்படியே கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்நிறுவனம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரங்களை காணலாம்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்நிறுவனம் 4,02,001 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 3,33,646 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதில் பைக் செக்மெண்ட் மட்டும் 1,88,774 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2024 ஜூன் மாத விற்பனையான 1,52,701 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 24 சதவீதம் அதிகம் ஆகும்.

TVS Sales Q1 2025

ஸ்கூட்டர் செகமெண்டை பொருத்தவரை 1,62,291 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையான 1,28,986 என்ற விற்பனை எண்ணிக்கையை ஒப்பிடும் போது 26 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஏற்றுமதி தான் இந்நிறுவனம் கடந்த ஜூன்மாதம் மொத்தம் 1,17,145 வாகனங்களை ஏற்று செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 76,074 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இது 54 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதில் டூவீலர்கள் மட்டும் 1,04,686 வானகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TVS Sales Q1 2025

கடந்த காலாண்டு ஏற்றுமதி விரங்களை காணும் போது 3.52 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு ஏற்றுமதியான 2.54 லட்சம் என்ற எண்ணிக்கையை விட 39 சதவீதம் அதிகம் ஆகும். இந்நிறுவனம் ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து பெற்றுவருவது நமக்கு தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விற்பனையில் சில நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருகின்றன. அதில் டிவிஎஸ் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தொடர்ந்து அதிகமான வாகனங்களை தயாரிப்பதால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 7:45 [IST]
English summary
Tvs sales q1 2025 hit record 12 77 lakh units june volumes up
மேலும்... #tvs #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X