உலகமே தமிழ்நாட்டை ஆச்சரியமா பாக்க போகுது! எப்படி ஒரு ஸ்கூட்டரால் இவ்ளோ மைலேஜை குடுக்க முடியும்?
தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னையை (Chennai) ஆசியாவின் டெட்ராய்டு (Detroit of Asia) என்பார்கள். ஏனெனில் இங்கு ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இதில், டிவிஎஸ் (TVS) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சென்னையை தலைமையிடமாக கொண்டுதான் டிவிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 5,25,150 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 4,78,159 டூவீலர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலமாக டிவிஎஸ் நிறுவனம் டூவீலர் விற்பனையில், 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனை செய்த 5,25,150 டூவீலர்களில், இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கை, 4,21,631 ஆகும். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 3,90,489 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் டூவீலர்களின் விற்பனையானது, 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதே போல் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்த டூவீலர்களின் விற்பனையும் உயரவே செய்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 87,670 டூவீலர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.
ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 1,03,519 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம், 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆக மொத்தத்தில் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 5,25,150 டூவீலர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் காலங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம். ஏனெனில் டிவிஎஸ் நிறுவனம் ஏராளமான புதிய டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டூவீலர் எது என கேட்டால், நிச்சயமாக அது டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி-ஆகதான் (TVS Jupiter CNG) இருக்கும்.
உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் விற்பனைக்கு வரவுள்ள இதன் மைலேஜ் அனேகமாக ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். ஆனால் இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








