85 கிமீ மைலேஜ்! பெட்ரோல் பங்க் ஓனர்கள் பொழப்புல மண்ண அள்ளி போட்ட விலை குறைவான பைக்! அடிமாட்டு ரேட்ல விக்கறாங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் (Entry-level Commuter Bikes) ஒன்று டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் (TVS Star City Plus). நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் பதிவு செய்துள்ளது.
இதன் சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 2,400 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 471 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் விற்பனையில் 409.55 சதவீத வளர்ச்சியை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பதிவு செய்து அசத்தியுள்ளது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில், 109.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6.03 kW பவர் மற்றும் 8.7 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் (Fuel Tank Capacity) வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும். டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஒரு லிட்டருக்கு 70-85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என, அதை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ட்யூயல் டோன் ட்ரம் மற்றும் ட்யூயல் டோன் டிஸ்க் ஆகியவை ஆகும். இதில், ட்யூயல் டோன் ட்ரம் வேரியண்ட், 4 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது.
அவை ப்ளாக்/ப்ளூ, ப்ளாக்/ரெட், ப்ளாக்/க்ரே மற்றும் ப்ளூ/சில்வர் ஆகியவை ஆகும். மறுபக்கம் ட்யூயல் டோன் டிஸ்க் வேரியண்ட், 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவை ப்ளாக்/ரெட், ப்ளாக்/க்ரே மற்றும் ப்ளூ/சில்வர் ஆகியவை ஆகும். டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதுடன், விலை குறைவானதும் கூட.
இந்த பைக்கின் ட்யூயல் டோன் ட்ரம் வேரியண்ட்டின் விலை 77,286 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் ட்யூயல் டோன் டிஸ்க் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 81,286 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus), ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








